For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனாதனம் என்பது இந்து ராஷ்டிரம்! அகிம்சையை பேசும் தடியையும் தூக்கும்! ஆர்ஆர்எஸ் மோகன் பகவத் அதிரடி

Google Oneindia Tamil News

டேராடூன் : ஹரித்வாரில் சாமியார்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியா அகிம்சையை பேசுவது மட்டுமல்லா தடியையும் தாங்கும் எனவும், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தர்களின் கனவு இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் என்றார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் இறுதி நிகழ்வில் பேசிய அவர், " இந்தியா அகிம்சையைப் பற்றி பேசும், ஆனால் தடியையும் தாங்கும், இந்த உலகம் அகிம்சையின் சக்தியை மட்டுமே புரிந்துகொள்கிறது என்றார்.

சட்டென ஆர்எஸ்எஸ் குறித்து கேட்ட டாடா... மதபாகுபாடு பார்க்காத அமைப்பு என பதிலளித்த நிதின் கட்கரி சட்டென ஆர்எஸ்எஸ் குறித்து கேட்ட டாடா... மதபாகுபாடு பார்க்காத அமைப்பு என பதிலளித்த நிதின் கட்கரி

மோகன் பகவத் பேச்சு

மோகன் பகவத் பேச்சு

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மோகன் பகவத், " சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தர் கனவு இந்தியா இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும், நீங்கள் 20-25 வருடங்கள் பேசினீர்கள், ஆனால் நாங்கள் எங்கள் வேகத்தை அதிகரித்தால், நான் 10-15 ஆண்டுளில் இலக்கை அடைவொம். அந்த காலகட்டத்தில், சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அரவிந்தரும் கற்பனை செய்த இந்தியாவைப் பார்ப்போம்,
உறுதியுடன் ஒன்றுபட்டால் சமூகம் அதன் இலக்கை அடைய முடியும்

தடியுடன் நடப்போம்

தடியுடன் நடப்போம்

எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. என்னிடம் அதிகாரம் இல்லை... அது மக்களிடம் உள்ளது. கட்டுப்பாடு அவர்களிடம் உள்ளது. அவர்கள் தயாராக இருக்கும்போது, ​​அனைவரின் நடத்தையும் மாறுகிறது. நாங்கள் அவற்றை தயார் செய்கிறோம். அச்சமின்றி நீயும் செய் முன்னுதாரணமாக இணைந்து நடப்போம் அகிம்சையை பற்றி பேசுவோம், ஆனால் தடியுடன் நடப்போம். அந்த தடி கனமானதாக இருக்க வேண்டும்

இந்து ராஷ்டிரம் என்ற இலக்கு

இந்து ராஷ்டிரம் என்ற இலக்கு

எங்களுக்கு யாருடனும் வெறுப்போ, பகையோ இல்லை நமக்கு பலம் இருக்க வேண்டும். இந்து ராஷ்டிரம் என்பது சனாதன தர்மம் என்ற மோகன் பகவத், மதத்தின் நோக்கங்கள் இந்தியாவின் நோக்கங்கள். சுவாமி விவேகானந்தர் மதமே இந்தியாவின் உயிர் என்றார். மத முன்னேற்றம் இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை. சனாதன தர்மம் என்பது இந்து ராஷ்டிரம் மட்டுமே. இந்தியாவின் முன்னேற்றம் உறுதி,'' என்றார். இந்தியா தனது முன்னேற்றப் பயணத்தைத் தொடங்கிவிட்டது, அதை இப்போது நிறுத்த முடியாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

இந்தியாவின் முன்னேற்றப் பயணம்

இந்தியாவின் முன்னேற்றப் பயணம்

"இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை நிறுத்த விரும்புவோர் அகற்றப்படுவார்கள் அல்லது முடிக்கப்படுவார்கள், ஆனால் இந்தியா நிறுத்தாது.. இப்போது ஒரு வாகனம் செல்ல தொடங்கி உள்ளது அதில் பிரேக் இல்லை. இடையில் யாரும் வரக்கூடாது. நீங்கள் விரும்பினால், வந்து எங்களுடன் உட்காருங்கள் அல்லது ஸ்டேஷனில் இருங்கள்.. எங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது பன்முகத்தன்மையையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். ஆனால் பன்முகத்தன்மை காரணமாக நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றாக அணிவகுத்துச் சென்றால், நமது இலக்கை 20-25 ஆண்டுகளில் அடைவோ எனவும் மோகன் பகவத் பேசினார்.

English summary
Addressing a gathering of preachers in Haridwar, RSS leader Mohan Bhagwat said that India would not only speak non-violence but also bear the brunt of the dream of Swami Vivekananda and Maharishi Aravind in another 10 or 15 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X