For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானுக்காக 20 ஆண்டுகாலம் உளவு பார்த்த சமாஜ்வாடி எம்பியின் உதவியாளர்- பகீர் தகவல்கள்

பாகிஸ்தானுக்காக 20 ஆண்டுகாலம் உளவு பார்த்ததாக சமாஜ்வாடி கட்சி எம்பியின் உதவியாளர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானுக்காக கடந்த 20 ஆண்டுகாலம் உளவு பார்த்ததாக சமாஜ்வாடி கட்சி எம்பி. முனாவார் சலீமின் உதவியாளர் ஃபர்கத் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரி அக்தர் பிடிபட்டு இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு ராணுவ ரகசியங்களைக் கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Samajwadi Party MP's aide arrested in Pakistan spy ring probe

தற்போது சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. முனாவார் சலீமின் உதவியாளர் ஃபர்கத் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 20 ஆண்டுகாலமாக தாம் உளவு பார்த்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேநேரத்தில் முனாவார் சலீமோ, தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது; கடந்த 11 மாதங்களுக்கு முன்னர்தான் என்னுடைய தனிப்பட்ட உதவியாளராக ஃபர்கத் சேர்ந்தார் என விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
SP Rajya Sabha MP Munawwar Saleem's personal assistant was arrested on charges of stealing Parliament documents and selling them to Pakistan's ISI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X