ஆஹாஹா.. இதுவல்லவோ சசிகலா யோகம்... ஸ்பெஷல் கிச்சன்.. ருசியாக சமைத்து சாப்பிட குக்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் அமைத்து கொடுக்கப்பட்ட சிறப்பு சமையலறையில் சசிகலா குக்கர் வைத்து சமைத்து சாப்பிட்டது அம்பலமாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார்.

இதற்காக டிஜிபி சத்தியநாராயண ராவ் 2 கோடி ரூபாய் சசிகலா குரூப்பிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும் டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ரூபா இடமாற்றம்

ரூபா இடமாற்றம்

இந்நிலையில் டிஐஜி ரூபா அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சத்தியநாராயண ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜபோக வாழ்க்கை

ராஜபோக வாழ்க்கை

இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. டிவி பார்க்க, யோகா செய்ய, பார்வையாளர்களை சந்திக்க நாற்காலிகளுடன் என தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சசிகலா.

ஸ்பெஷல் கிட்சன்

ஸ்பெஷல் கிட்சன்

இதன் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலாவுக்கு என சிறையில் ஸ்பெஷல் சமையலறையும் அமைத்து தரப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

குக்கரில் சமைத்து..

குக்கரில் சமைத்து..

ஸ்பெஷல் கிட்சனில் குக்கர் வைத்து தனியாக சமைத்து சாப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது. சிறை வாழ்க்கை என்ற சுவடே தெரியாத வகையில் சசிகலா சொகுசு வாழ்க்கையை வாழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala lives in prison like a queen. She does not feel the prison life. She is the only person who gets five rooms in the prison. Sasikala gets food in a special kitchen and with cooker.
Please Wait while comments are loading...