For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலைமை எடிட்டர் சேகர் குப்தா ராஜினாமா!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைமை எடிட்டர் சேகர் குப்தா, 19 ஆண்டுகால பணிக்காலத்துக்கு பிறகு இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், 1977ம் ஆண்டு நிருபராக பணிக்கு சேர்ந்த சேகர் குப்தா, படிப்படியாக முன்னேறி தற்போது தலைமை எடிட்டராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான உறுதியான காரணங்கள் உடனடியாக வெளியாகாவிட்டாலும், அவர் வேறு ஒரு ஊடகத்தில் பணியாற்றுவதற்காக ராஜினாமா செய்துள்ளதாக அப்பத்திரிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே சக ஊழியர்களுக்கு அவர் எழுதியுள்ள பிரிவு உபச்சார கடிதம் வட இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு ஒரு முறை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சேகர் குப்தா. இரண்டு 'இன்னிங்சுகளிலும்' சேர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தனது அனுபவம் 25 ஆண்டுகளாகியுள்ளதையும் பெருமையோடு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரசை விஞ்சிய ஒரு தினப்பத்திரிகை கிடையாது, எனக்கு அதை தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் நான் இரண்டுவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன் என்றும் தனது நெகிழ்ச்சியை ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Shekhar Gupta, the editor-in-chief of the India Express, today resigned from his post. Gupta started his career in journalism at the same paper as a reporter in 1977 and worked there for a full 25 years in two innings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X