For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எது எதற்கோ மானியம் தரும்போது சைக்கிள் வாங்க தந்தால் என்னவாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்படும்போது, சைக்கிள்களுக்கு ஏன் வழங்கக் கூடாது என இந்திய எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பசுமை சூழ்நிலைக்காக சைக்கிள் மிதிப்பது, நாட்டில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிப்பது என்ற தலைப்பில் அந்த அமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

அதில், அனைவரின் உடல்நலத்திற்கு உடல் உழைப்பு அவசியம் என்றும், உடல் உழைப்பிற்கு எளிதான பயிற்சியாக சைக்கிள் ஓட்டுவது அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சைக்கிள்தான் பெஸ்ட்:

சைக்கிள்தான் பெஸ்ட்:

எனவே சைக்கிள் ஓட்டுவதை பெரிய இயக்கமாக மாற்றினில், பெரும்பாலான நோய்களை ஓட்டி விடலாம்.

சைக்கிள் ஓட்டப் பாதை தேவை:

சைக்கிள் ஓட்டப் பாதை தேவை:

இதற்கான முதல் கட்டமாக சாலைகளில் சைக்கிள் ஓட்ட பாதை அமைக்க வேண்டியது அவசியம்.

மானியம் வழங்கக்கூடாதா?:

மானியம் வழங்கக்கூடாதா?:

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்படும்போது, ஏன் சைக்கிள்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கை:

சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கை:

இதனிடையே உடல் நலத்திற்கு தேவையான சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் விதத்தில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் பாதைகள் வேண்டும்.

சைக்கிள்களுக்கு தனிப்பாதை:

சைக்கிள்களுக்கு தனிப்பாதை:

அதுவும், சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
Government should waive the taxes on cycles bought by low-income population to promote their use, a report released by the Energy and Resources Institute (TERI) said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X