For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூன் 4ல் கருப்பு பண மீட்பு குழுவின் முதல் கூட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு பணம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷாவும், துணைத் தலைவராக அர்ஜித் பசாயத்தும் நியமிக்கப்பட்டனர். மேலும், 11 பேர் இந்த குழுவினர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

SIT on black money to hold first meeting on June 4

இந்நிலையில், புலனாய்வு குழுவின் தலைவர் எம்.பி.ஷா மற்றும் துணைத் அர்ஜித் பசாயத் ஆகியோர் ஜூன் 4ஆம் தேதி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கறுப்புப்பண மீட்புக்குழுவின் முதல் கூட்டத்தில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்தும், ஏற்கனவே, நடைபெற்ற விசாரணையின் நிலைமை, தற்போதுள்ள நிலை மற்றும் அனைத்து துறைகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
The first high-level meeting of the Special Investigation Team (SIT) on the issue of black money and special probe into cases of unaccounted funds stashed away abroad by Indians will be held here on June 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X