For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியை பாஜகவில் சேர்க்கும் மோடியின் ஆசைக்கு சு.சாமி எதிர்ப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தங்கள் கட்சியில் சேர்க்க விரும்புகையில் கட்சியில் இனியும் சினிமா நட்சத்திரங்கள் வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி சென்னை வந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இதையடுத்து ரஜினியை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ரஜினி வந்தால் நிச்சயம் ஏற்போம் என்று பாஜக தனது எண்ணத்தை வெளிப்படையாகவே அறிவித்தது.

இப்படி ரசிகர் பட்டாளம் உள்ள ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முனைப்பாக உள்ளது.

மோடி

மோடி

ரஜினி பாஜகவில் சேர்வது பிரதமர் மோடிக்கும் விருப்பம் தான். அவர் மட்டும் பாஜகவில் சேர்ந்தால் அவரின் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெறலாம்.

ரஜினி

ரஜினி

ரஜினியை கட்சியில் சேர்க்கும் பாஜகவின் எண்ணம் குறித்து அக்கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமியிடம் பத்திரிக்கையாளர் கேட்டதற்கு அவரோ சட்டென்று, கட்சியில் இனியும் சினிமா நட்சத்திரங்கள் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.

சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா

பாஜகவில் ரஜினியின் நண்பரான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா, நடிகர் வினோத் கன்னா, நடிகை ஹேமமாலினி உள்ளிட்டோர் உள்ளனர். இந்நிலையில் தான் சாமி அவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹேமமாலினி

ஹேமமாலினி

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹேமமாலினி தொகுதி பக்கம் செல்லாததால் மக்கள் கடுப்பாகி அவரை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர். அதன் பிறகே அவர் தொகுதிக்கு சென்றார்.

ஜெயலலலிதா

ஜெயலலலிதா

ஜெயலலிதா மீது முதலில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தவர் சுப்பிரமணியம் சாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When asked about PM Modi's desire to induct Rajinikanth in BJP, Subramaniam Swamy told that, No more cinema stars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X