• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லியில் 11 பேர் கூட்டு தற்கொலை.. சொர்க்கத்தைப் பார்க்கப் போவதாக கடிதம்.. போலீஸிடம் சிக்கியது

By Lakshmi Priya
|

டெல்லி: டெல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்தும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

டெல்லி புராரி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் நேற்று 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

7 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 3 இளவயதினர் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த பரபரப்பு பின்னணி இதோ.

வட டெல்லியின் புராரி ஏரியாவில் உள்ளது சாந்த் நகர். இங்கு இரண்டடுக்கு மாடி கொண்ட ஒரு வீடு உள்ளது. இதில் 11 பேர் வசித்து வந்தனர். இவர்கள் மளிகை மற்றும் பிளைவுட் பிசினஸ் செய்து வந்தனர்.

தரையில் ஒரு சடலம்

தரையில் ஒரு சடலம்

இன்று 11 பேரில் 10 பேரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் மட்டும் தரையில் கிடந்தது. அவருக்கு 75 வயது இருக்கும். மற்றவர்களின் கண்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்டிருந்தன.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

பக்கத்து வீட்டுக்காரர் புகாரின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 11பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனரா இல்லை இவர்களை கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நாராயண் மகனுக்கு

நாராயண் மகனுக்கு

வீட்டில் போலீஸார் சோதனையிட்ட நிலையில் அங்கிருந்த பணம், நகை ஆகியன எதுவும் கொள்ளை போகவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வீடு முழுவதும் வேற்று நபரின் கைரேகைகள் எதுவும் காணப்படவில்லை. எனவே போலீஸார் இதை வைத்து கொண்டு இது கொலையல்ல என்ற முடிவுக்கு வந்தனர். இது தொடர்பாக இவர்கள் உறவினர்கள் கூறுகையில், நாராயண் மகன் லலித்துக்கு ஒரு விபத்தில் பேசும் திறனை இழந்துவிட்டார்.

பூஜையினால் பேச்சு வந்தது

பூஜையினால் பேச்சு வந்தது

தொடர்ந்து மருந்துகள் கொடுத்தும் பேச்சு வராததால் இவர்களது குடும்பத்தினர் பூஜை, புனஸ்காரம் என்றிருந்தனர். இதையடுத்து லலித்துக்கு பேச்சு வந்துவிட்டது. இதனால் இந்த குடும்பத்திற்கு கடவுள் நம்பிக்கை அதிகமாகவே காணப்பட்டது என்றார். இதையடுத்து பூஜை அறையில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த டைரியில் இறைவனை சென்றடைவதற்கான வழிமுறைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடவுளை பார்க்க 10 வழிகள் என கடிதம்

கடவுளை பார்க்க 10 வழிகள் என கடிதம்

அதில் எப்படி தற்கொலை செய்து கொண்டு சொர்க்கத்தை அடைவது என்பது குறித்து பாயிண்ட் பாயிண்டாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதில்:

1. தற்கொலை செய்ய வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்யவும்.

2. புடவை அல்லது துப்பட்டா ஆகியவற்றை கட்டிக் கொள்ள வேண்டும்.

3.இறப்பதற்கு முன்னர் 7 நாட்களுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். இவை முடிந்தவுடன் உங்கள் வேலையை முடிக்க வேண்டும்.

4.வயதான பெண்மணியால் நிற்கமுடியவில்லை என்றால் அவர் வேறொரு அறையில் படுத்து கொள்ளலாம்.

5. மங்களான விளக்குகளை அணைக்கவும்.

6. கைகளைக் கட்டியவுடன் மீதமுள்ள துணிகளால் கண்களை கட்டவும். யாரும் யாருக்கும் தெரியாத வகையில் கட்ட வேண்டும்.

7. வாயையும் நன்கு இறுக்கமாக கட்ட வேண்டும்.

8. அதிக அர்ப்பணிப்புடன் இந்த பணியை செய்தால் நல்ல பலன் கூடிவரும்.

9. இவற்றை இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணிக்குள் செய்ய வேண்டும். அதற்கு முன்னரும் பூஜை செய்ய வேண்டும்.

10. எல்லார் மனதிலும் கடவுளை காண வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.

இத்தகைய கடிதம் யார் எழுதியது என்று போலீஸாருக்கு மர்மமாகவே உள்ளது. ஆனால் யாரோ கட்டளையிட்டதன் பேரில் இது நடத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை மாந்திரீகம் தந்திரத்தில் நம்பிக்கைக் கொண்டதால் ஏதேனும் மந்திரவாதிகள் இதை எழுதிக் கொடுத்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The notes talk about if a group of 11 people follows these rituals, all problems would ease out and they would attain salvation. Some notes have dates on which they were written while others don't. All the notes talk about reaching the end and gaining peace," one of the investigators said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more