மதுரை காமராஜர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் தடை
மதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு மே 26 ஆம் தேதி செல்லதுரை என்பவர் ஆளுநரால் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். துணை வேந்தர் பதவிக்கான பணி மூப்பு தகுதி செல்லதுரைக்கு இல்லை என்று கூறி செல்லதுரை துணை வேந்தராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, அந்தோனி ராஜ் ஆகிய 2 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லத்துறை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, செல்லதுரை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
செல்லதுரையின் மனு இன்று திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏ.கே.சித்தரி, அசோக் பூஷன் அமர்வு விசாரித்தது. அப்போது செல்லத்துரையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், தமிழக ஆளுநர் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி செல்லத்துரையை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்தார். அவர் மிகவும் தகுதியான நபர் என்று கூறினார். அதோடு, சென்னை உயர்நீதிமன்றம் துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ததற்கு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு தற்போது புதிய துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் மற்றும் கே.கே.வேணுகோபால் ஆகியோர் வாதிடுகையில், செல்லத்துரை பி.ஏ., எல்.எல்.பி., படிக்காதவர் என்றும், அவர் மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட போது, அவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்ததாகவும், எனவே அவரது நியமனம் செல்லாது என்றும் அதனால் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது சரி தான் என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், ஆகஸ்ட் 6ம் தேதி வரை புதிய துணைவேந்தரை நியமனம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications