காஞ்சிபுரம் கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞருக்கு உதவி... சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை கேட்ட ரஷ்ய இளைஞர்-வீடியோ

டெல்லி: ஏடிஎம் கார்டு முடங்கியதால் பணம் இல்லாமல் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞருக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும் என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.

ரஷ்யாவை சேர்ந்தவர் இவாஞ்சலின். இவர் தமிழகத்தைச் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது மாமல்லபுரத்தைச் சுற்றி பார்த்த அவர் அங்கிருந்து குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு சென்றார்.

Sushma Swaraj says that she will help to russian youth who begs in temple

இதைத் தொடர்ந்து பணம் எடுப்பதற்காக அங்குள்ள ஏடிஎம் மையங்களில் அவர் கார்டை பயன்படுத்தியதில் அந்த கார்டு முடக்கப்பட்டது தெரியவந்தது. கையில் இருந்த பணம் காலியாகிவிட்ட நிலையில் சென்னை செல்வதற்காக கோயில் வாயிலில் நின்று பக்தர்களிடம் யாசகம் கேட்டார்.

தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் இவாஞ்சலின் என்றும் தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த இடத்தில் ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு போலீஸார் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு ரஷ்யா; இவாஞ்சலினுக்குத் தேவையான உதவிகளை சென்னையில் உள்ள அதிகாரிகள் நிச்சயம் செய்வார்கள் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
External affairs Minister Sushma Swaraj says that she will give all assistance to that Russian youth who begs in Kanchipuram temple after his ATM card freezed.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற