ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்து 10 பேர் பரிதாப பலி… உத்தரப்பிரதேசத்தில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உ.பி. மாநிலம் மதுரா பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், பரேய்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆற்றில் கவிழ்ந்த காரினுள், அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததோடு, இரவு நேரம் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றினுள் கவிழ்ந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Ten found dead as car falls into canal in Uttar Pradesh

நீரில் மூழ்கிய காரையும், 10 பேரின் சடலங்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரா-பரத்பூர் சாலையில் எஸ்யுவி சொகுசுக்காரில் மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரா அருகில் சாலையில் வந்துகொண்டு போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

காரின் டிரைவரை காணவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார் அவரின் உடலைத் தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Uttar Pradesh: Ten found dead as car falls into canal in Madhura.
Please Wait while comments are loading...