தில் இருந்தால் மட்டுமே குளிக்க முடியும்.. உலகின் அதி பயங்கர நீச்சல் குளம் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹௌஸ்டன் மாநகரில் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் 40 மாடி உயரத்தில் நீச்சல் குளம் உள்ளது.

ஹௌஸ்டன் நகரில் 40 அடுக்குகளை கொண்ட சொகுசு குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் வினவுவது புரிகிறது.

இந்த கட்டடத்தின் 40-ஆவது மாடியின் முனையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். பிரம்மாண்டமான இந்த நீச்சல் குளம் கட்டடத்திலிருந்து 10 அடி ஆழத்துக்கு விரிவாக உள்ளது.

இதன் மூலம் நகரின் மீதே நீச்சல் அடிக்கும் உணர்வும், வானத்தில் பறக்கும் உணர்வு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. அதேவேளையில் பறவைகள் கண் பார்வைக்குள் நகரம் எப்படி தெரியுமோ அது போல் இந்த நீச்சல் குளமும் வடிவமைக்கப்பட்டது.

இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது போல் நீச்சல் அடிக்கும் மனிதருக்கு குமட்டல் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் அவர் வயிற்றுக்குள் புளி கரைத்திருக்கும். எனினும் காற்றில் மிதந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.

8 அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த குளத்தில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A luxury residential building in Houston is making quite a buzz for one unique amenity- its swimming pool. What's special, you ask? The 'Sky Pool' on the 40th floor of the building overlooks the city and is extended 10 feet beyond the edge of the building. That's like swimming in the sky with a bird's eye view of the city.
Please Wait while comments are loading...