ஜனாதிபதி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய 28ம் தேதி கடைசி நாள்.. அரசியல் கட்சிகள் பரபர

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்தியாவில் நடைபெறும் மற்ற பொதுத் தேர்தல்களைப் போல, ஜனாதிபதி தேர்தலில் நினைத்த யாரும் போட்டியிட முடியாது. அதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் வேட்பாளர் தெரிவு செய்வதில் போட்டி நிலவுகிறது.

The presidential candidate would have to file his nominations by June 28

ஒருவர் போட்டியிட வேண்டுமானால், அவருக்கு, குறைந்தபட்சம் 50 எம்எல்ஏ.,க்கள் அல்லது எம்பி.,க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சட்டதிருத்தம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால், ஜனாதிபதி தேர்தலில், சொற்பமான வேட்பாளர்களே போட்டியிடும் நிலை உள்ளது. இன்று தொடங்கி, ஜூன் 28ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. ஜூன் 29ம் தேதி வேட்பு மனு பரிசிலனை செய்யப்படும்.

ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும். மாநில சட்டப்பேரவைகள் மற்றும் லோக் சபா, ராஜ்ய சபாவில் வாக்குப் பதிவு நடைபெறும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The presidential candidate would have to file his nominations by June 28. Political sensation in Delhi.
Please Wait while comments are loading...