For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: உபி முதல்வர் கடும் எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோரக்பூர்: சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கோரக்பூர சென்றார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை கையிலெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

There is no compromise in the law and order issue: UP CM

மேலும் அவர் பேசியதாவது, உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சியில் சிறந்த மாநிலமாக்க வேண்டும் என்ற மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் நான் இறங்கி உள்ளேன் என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் என்பதே கிடையாது என்றும் அவர் கூறினார்.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 24 மணி நேரம் மின்சாரம் கொடுப்போம், விரைவில் தரமான சாலைகளை கொடுப்போம் என்றும் யோகி ஆதித்யநாத் தெவித்தார்.

மேலும் தன்னுடைய அரசு எந்த ஒரு விவசாயியையும் தற்கொலைக்கு தள்ளாது என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.

English summary
UP CM Yogi Adityanath says that there is no compromise in the law and order issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X