குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை: நிதியுதவி கேட்டு மன்றாடும் கார் டிரைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இதய நோயுடன் போராடி வரும் 14 மாத பெண் குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுமாறு கார் டிரைவர் ஒருவர் மன்றாடுகிறார்.

14 மாத குழந்தையான ஷ்ரத்தா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஷ்ரத்தா பிறந்த 2 மாதங்களில் அவரது இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

This car driver’s baby has a hole in her heart

ஷ்ரத்தாவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஷ்ரத்தாவை அனுமதித்தனர். ஷ்ரத்தாவின் தந்தை சுப்ரந்த் ரவுத் கார்பரேட் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக உள்ளார்.

அவரின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரம். அதில் வீட்டு வாடகை, உணவு, மகளின் சிகிச்சை செலவு என அனைத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது. சுப்ரந்தின் மனைவி வீட்டை கவனித்துக் கொண்டிருக்கிறார். டாக்டர் ஃபீஸ், மருந்து, மருத்துவமனை கட்டணம், அறுவை சிகிச்சை என்று ஷ்ரத்தாவின் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது.

This car driver’s baby has a hole in her heart

ஷ்ரத்தாவின் சிகிச்சைக்காக தங்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் அடமானம் வைத்து டெல்லி அப்பல்லோ மருத்துவனையில் சேர்த்தனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் ஷ்ரத்தாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.

தாங்கள் ஏற்கனவே சேர்த்து வைத்த பணத்தை வைத்து ஷ்ரத்தாவுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடலாமா என்ற எண்ணத்தில் குழந்தையை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் பலனில்லை. வலியால் துடிக்கும் ஷ்ரத்தாவுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

This car driver’s baby has a hole in her heart

என் குழந்தை என் கண் முன்பு துடிக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு சென்று கொண்டிருக்கிறாள். ஒரு தந்தையாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் என்ன தான் உழைத்தாலும் குறுகிய காலத்தில் ரூ. 5 லட்சம் சம்பாதிக்க முடியாது என்கிறார் சுப்ரந்த்.

This car driver’s baby has a hole in her heart

நீங்கள் சுப்ரந்துக்கு உதவி செய்ய நினைத்தால் நன்கொடை அளிப்பதுடன் இந்த செய்தியை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shradha is fourteen months old and has been sick for a long time. The hole in her heart, what cardiac experts call a septal defect, was diagnosed two months after her birth. Doctors who examined her said that an open heart surgery was immediately in order.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற