ஒருவர் அல்ல..இருவர் அல்ல.. 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ்- வீடியோ

  பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் பாஜகவிற்காக வேலை பார்த்துள்ளனர்.

  கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

  இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 120 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

  எப்படி செயல்படுவார்கள்

  எப்படி செயல்படுவார்கள்

  பொதுவாக பாஜக கட்சிக்கு அமித் ஷா தலைவரான பின் தேர்தல் சமயங்களில் மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறார்கள். ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் 50,000 பேர் சேர்ந்து வேலை பார்ப்பதுதான் அவர்களின் ஸ்டைல். உத்தர பிரதேச தேர்தல் தொடங்கி திரிபுரா தேர்தல் வரை எல்லாவற்றிலும் அவர்கள் இந்த விதியை பயன்படுத்தினார்கள். இதை கர்நாடக தேர்தலிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  ஆரம்பமே 20000 பேர்

  ஆரம்பமே 20000 பேர்

  ஆரம்பத்தில் கர்நாடகாவில் 20,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் களமிறங்கி இருந்தனர். இவர்கள் தான் முதற்கட்ட தேர்தல் பணிகளை செய்தனர். தமிழ், ஹிந்தி, கன்னடம் தெரிந்த பணியாளர்களை இவர்கள் பணிக்கு அமர்த்தி இருந்தனர். மூன்று மொழி வாக்காளர்களை இது கவர உதவி இருக்கிறது. எல்லா மாநிலங்களில் இருந்து இளைஞர் படையை அந்த அமைப்பு அனுப்பி இருந்தது.

  அடுத்தகட்டமாக 30000 பேர்

  அடுத்தகட்டமாக 30000 பேர்

  ஆனால் இந்த வேலை இதோடு முடியவில்லை. இன்னும் 30,000 பேர் அதற்கு அடுத்த நாட்களில் பணியில் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் 50,000 பேரும் சேர்ந்து பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்துள்ளனர். எல்லோரிடமும் தனித்தனியாக சென்று பேசி இவர்கள், பாஜக பற்றி எடுத்துரைத்துள்ளனர். இந்த செயலைத்தான் அவர்கள் இதற்கு முன்பு நடந்த மற்ற மாநில தேர்தலிலும் செய்து இருக்கிறார்கள்.

  லிங்காயத்து பிரச்சனை

  லிங்காயத்து பிரச்சனை

  முக்கியமாக இவர்கள் லிங்காயத்துகள் குறித்து மற்ற மக்களிடம் பேசி உள்ளனர். லிங்காயத்து தனி மத அறிவிப்பால், ஹிந்து மதம் எப்படி உடையும், என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று பிரச்சாரம் செய்து உள்ளனர். அதேபோல் இதில் சில மாற்று மத குருமார்களை பேச வைத்து, மாற்று மத மக்களின் வாக்குகளையும் பெற்று இருக்கிறார்கள். இதுதான் லிங்காயத்து வாக்குகளை அவர்களுக்கு பெற்று தந்தது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The RSS has embarked on a mighty mission to ensure that the BJP wins the Karnataka assembly elections. Embarking on a man to man marking mission, the RSS would replicate what it did in Gujarat to ensure a BJP victory.There are already around 20,000 swayamsevaks on the ground and in due course of time another 30,000 would be added. The RSS would look to drive across the point of Hindu unity.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற