சோனியா ஆலோசகர் அகமது படேல் ராஜ்யசபா எம்பி கனவுக்கு வேட்டு- குஜராத்தில் காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவரது ஆலோசகரான அகமது படேலின் ராஜ்யசபா எம்.பி. கனவுக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் பாஜக முதல் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் திடீரென 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான வகேலா தம்மை கட்சி மேலிடம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார். ஆனால் டெல்லி மேலிடமோ இதை நிராகரித்து வகேலாவை ஓரம்கட்டியது.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல்

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வகேலா ஆதரவு காங்கிரஸ் 11 எம்.எல்.ஏக்கள், பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் வகேலா மீது கடும் கோபம் கொண்டது.

வகேலா விக்கெட் அவுட்

வகேலா விக்கெட் அவுட்

இதையடுத்து வகேலா தம்மை காங்கிரஸ் நீக்கிவிட்டது என அறிவித்தார். தாமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆகஸ்ட் 8-ந் தேதியன்று ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.

இதுதான் நிலவரம்

இதுதான் நிலவரம்

குஜராத் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 182. இதில் பாஜகவுக்கு 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ்- 57; தேசியவாத காங்கிரஸ்-2; ஐக்கிய ஜனதா தளம் -1.

ராஜ்யசபா தேர்தல்

ராஜ்யசபா தேர்தல்

குஜராத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதன்படி பாஜகவுக்கு 2 எம்.பிக்கள் உறுதியாக கிடைக்கும். அதனால்தான் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 26 எம்.எல்.ஏக்கள் எஞ்சி உள்ளனர்.

அகமது படேல்

அகமது படேல்

காங்கிரஸுக்கு 57, தேசியவாத காங்கிரஸின் 2, ஐக்கிய ஜனதா தளத்தில் 1 என மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. அதனால்தான் சோனியா தமது ஆலோசகர் அகமது படேலை வேட்பாளராக களமிறக்கி உள்ளார்.

நெருக்கடியில் அகமது படேல்

நெருக்கடியில் அகமது படேல்

ஆனால் வகேலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் நிச்சயம் அகமது படேலை ஆதரிக்க முடியாது என கூறி வருகின்றனர். இதனால் அகமது படேலுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆடுபுலி ஆட்டம்

ஆடுபுலி ஆட்டம்

இந்நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவே செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே வகேலாவின் ஆதரவாளர்கள். வகேலாவின் ஆதரவாளர் ஒருவரை அகமது படேலுக்கு போட்டியாக நிற்க வைத்து அந்த நபரை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. தம்மிடம் உள்ள 27 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு அகமது படேலை வீழ்த்தினால் சோனியாவுக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் பாஜகவின் திட்டமாம். பாஜகவின் இந்த வியூகம் காங்கிரஸ் மேலிடத்தை அலறவைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Congress legislators resignation is threatening Ahmed Patel’s chances in the Rajya Sabha elections.
Please Wait while comments are loading...