இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொல்ல முயன்ற கொடூரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெல்காம்: இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

அம்மாநிலத்தின் பெல்காம் மாவட்டம், பயில்ஹொங்கல் தாலுகாவிலுள்ளது வண்ணூர் கிராமம். அக்கிராத்தை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.

 Two and half year old little girl was raped and the accused tried to bury her alive

அப்போது சுபாஷ் நாயக்கர் என்ற அதே ஊரை சேர்ந்த 24 வயது காமக்கொடூரன், சிறுமியை பள்ளிக்கு அருகே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளான். இதன்பிறகு சிறுமியை எரித்துக்கொல்லும் நோக்கத்தில் தீ வைத்துள்ளான்.

அப்போது சிறுமியின் பெற்றோர் அந்த வழியாக வந்ததால் இதை பார்த்து சிறுமி உடலில் தீ பரவியதை அணைத்தனர். ஊர்மக்கள் சேர்ந்து சுபாஷ் நாயக்கருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி பெல்காம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two and half year old little girl was raped and the accused tried to bury her alive in Belagavi district of Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற