For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ 8 லட்சமாக உயர்கிறது!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இட ஒதுக்கீட்டின் பலன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் வகையில் அவர்களின் வருமான உச்சவரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் ஓ.பி.சி. என்றழைக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் அவசியம்.

 Union Cabinet approves to increase creamy layer for OBC

இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரிமிலேயர்) ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இன்றைக்கு நிலவும் விலைவாசி உயர்வு, பண வீக்கச் சூழலில் இந்த வரையறைக்குள் வர முடியாத நிலை உள்ளதால் இதர பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலோர் இடஒதுக்கீட்டுச் சலுகையை பெற்று அனுபவிக்க முடியவில்லை.

எனவே இந்த உச்சவரம்பை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு சமூக நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நிலுவையில் இருந்த அந்த பரிந்துரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற்று அனுபவிக்க உதவியாக அமையும்.

இந்த கமி‌ஷன், உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 12 வாரங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.

English summary
The Union Cabinet has approved to increase the creamy layer to OBC from Rs 6 lakhs to 8 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X