For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக காணாமல் போக போகிறது.. பாருங்கள்! ஆருடம் சொல்லும் லாலு பிரசாத் யாதவ்.. பரபரக்கும் உபி களம்!

By
Google Oneindia Tamil News

பீகார்: உத்தரப்பிரதேச தேர்தலுக்குபிறகு பாஜக காணாமல் போகும் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. கோயில் குறித்துப் பேசிக்கொண்டும், கலவரத்தைத் தூண்டிக்கொண்டும் இருப்பது தான் பாஜகவின் நோக்கம் என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நாளை தொடங்குகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது.

முன்னோடி! 33 வருடத்திற்கு முன் தமிழ்நாடு செயல்படுத்திய திட்டத்தை.. உபியில் வாக்குறுதியாக அளித்த பாஜக முன்னோடி! 33 வருடத்திற்கு முன் தமிழ்நாடு செயல்படுத்திய திட்டத்தை.. உபியில் வாக்குறுதியாக அளித்த பாஜக

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''பாஜக மதத்தை வைத்து கட்சி நடத்துகிறது. மதம் குறித்துப் பேசியே மக்களை சோர்வடையச் செய்கிறது. உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாஜக செய்து வரும் பரப்புரையைப் பார்த்தால், நிச்சயம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தோற்கும்.

காணாமல் போகும்

காணாமல் போகும்

பாஜக செய்த கலவரங்கள், அவர்கள் பிரசாரங்ளைப் பார்க்கும் போது இந்தத் தேர்தலுக்குப் பிறகு பாஜக எனும் கட்சியே காணாமல் போகும்'' என்று தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலிலும் மத்திய தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது லாலு கட்சி. இந்த உத்தரப்பிரதேச தேர்தலில் லாலு, சமாஜ்வாதிக் கட்சியையே ஆதரிப்பதாகத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நாளை தொடங்கி நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் நாளை காலை தொடங்குகிறது. 11 மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என்று நான்கு முனைப் போட்டி உத்தரப்பிரதேசத்தில் நிலவுகிறது.

 பாஜக VS சமாஜ்வாதி

பாஜக VS சமாஜ்வாதி

இந்தத்தேர்தலில் உத்தரப்பிரதேசம் பெரிய கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கும் அதற்கு முந்தைய தேர்தலில் ஆட்சியைப் பிடித்த சமாஜ்வாதிக்கும் தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மீண்டும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தெரிந்துகொள்ள மொத்த நாடும் ஆவலாக உள்ளது.

English summary
Former Bihar Chief Minister Lalu Prasad Yadav has said that the BJP will disappear after the Uttar Pradesh elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X