வெஜ்டேரியன்ஸ் & டீடோட்டலர்ஸ்க்கு மட்டும்தான் கோல்டு மெடல்.. புனே பல்கலைக்கழகம் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே 'கோல்டு மெடல்' வழங்கப்படும் என புனே பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற புனே பல்கலைக்கழகம் 1949 ஆம் தொடங்கப்பட்டது. 411 ஏக்கர் பரப்பளவில் இந்த பல்கலைக்கழகம் பரந்து விரிந்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோல்ட் மெடல்களை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அசைவம் சாப்பிடக்கூடாது

அசைவம் சாப்பிடக்கூடாது

அதன்படி கோல்டு மெடல் பெற விரும்பும் மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டீடோட்டலர்களாக இருக்கனும்

டீடோட்டலர்களாக இருக்கனும்

மேலும் மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் கோல்டு மெடல் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே கோல்டு மெடல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெலர் மாமா

ஷெலர் மாமா

அசைவம் சாப்பிடாமல், மது அருந்தாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஷெலர் மாமா என்ற பெயருடன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மார்க் எதற்கு?

மார்க் எதற்கு?

பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் படித்து பெறும் மதிப்பெண்கள் எதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எம்பி சுப்பிரியா எதிர்ப்பு

எம்பி சுப்பிரியா எதிர்ப்பு

மாணவர்களிடம் சமூக ரீதியில் பிளவை ஏற்படுத்தும் செயல் என்றும் புகார் எழுந்துள்ளது. பல்கலைக் கழகத்தின் இந்த விதிமுறை தனக்கு அதிர்ச்சியளிப்பதாக எம்பியும் சரத்பவாரின் மகளுமான சுப்பிரியா சுளே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எம்பி சுப்பிரியா சுளே டிவிட்

நமது பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது என்றும் அவர் தனது டிவிட்டில் கேட்டுள்ளார். மெரிட்டில் வந்த மாணவர்கள் கதி என்ன என்றும், அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க பல்கலைக்கழகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களை ஏன் பிளவுபடுத்துகிறீர்கள் என்றும் எம்பி சுப்பிரியா சுளே கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pune University has announced its new rule, which states that only those students who are vegetarians and teetotallers will be considered eligible for receiving gold medals.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற