‘யாஷ் புயலே அடிச்சாலும்...’ நிருபரையே திக்குமுக்காட வைத்த நபர்.. வேற லெவல் பேட்டிங்க!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் யாஸ் புயல் கரையை கடந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடந்தது. ஆரம்பத்தில் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த யாஸ் புயலின் வேகம் நேரம் ஆக ஆக அதிகரித்தது. பிற்பகல் 12.30 மணியளவில் புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
புயலின் காரணமாக ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தின் திகா, கிழக்கு மெதினிபூர், நந்திகிராம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றின் வேகம் மற்றும் கனமழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

புயல் நேரலை
இந்நிலையில் ஒடிசாவில் இயங்கி வரும் தொலைக்காட்சி ஒன்றில் புயல் கரையை கடக்கும் காட்சிகள் நேரலை செய்யப்பட்டன. அந்த தொலைகாட்சியின் நிருபர் ஒருவர் கையில் மைக் பிடித்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

பதில் கேள்வி
அப்போது அந்த வழியாக சென்ற ஒருவரிடம் பேட்டிகண்ட நிருபர், "கனமழை பெய்து கொண்டிருக்கிறது.. காற்றும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.. நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள்" என கேட்டார். அதற்கு அந்த நபர், "அதே தான் நானும் கேட்கிறேன்.. இந்த சூழலில் நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள்?", என எதிர் கேள்வி கேட்டு நிருபரை மடக்கினார்.

திக்குமுக்காடிய நிருபர்
அதற்கு அந்த நிருபர், "புயல் கரையை கடப்பதை செய்தி சேகரிப்பதற்காக நான் வந்தேன்", என பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு சற்றும் சளைக்காமல், "நீங்கள் செய்தி சேகரிக்கும் போது பேட்டி கொடுக்க ஆள் வேண்டாமா? அதற்காக தான் நான் வெளியே வந்தேன்", எனக் கூறி நிருபரை திக்குமுக்காட செய்துள்ளார் அந்த மனிதர்.

வைரல் பேட்டி
இந்த புயல் பேட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைபார்த்த நெட்டிசன்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வருகின்றனர். 'ஆனாலும் அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அவர் வெளியில் வராமல் இருந்தால், பாவம் அந்த நிருபருக்கு இப்படி ஒரு வைரல் கண்டெண்ட் கிடைத்திருக்குமா?' என ஒருசாரார் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

பைத்தியக்காரத்தனம்
மற்றொரு தரப்போ, 'புயல், வெள்ளம், மழை, இப்போது கொரோனா என முன்களப் பணியாளர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் செய்ய முடிந்த பெரிய உதவி, வீட்டில் பத்திரமாக இருப்பதுதான். இதுபோல் அதிமேதாவித்தனமாகப் பேசிக் கொண்டு வெளியில் சுற்றுவது பைத்தியக்காரத்தனம்' என அந்நபரைத் திட்டி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications