For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போனவர்கள் போகட்டும் போடா... புதிய சென்சார் போர்டு அமைக்க திட்டம்: மத்திய அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜினாமா செய்த உறுப்பினர்களை பற்றி கவலையில்லை, புதிய சென்சார் போர்டு சில நாட்களில் அமைக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இமை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

தேரா சச்சா சவுதா தலைவர் நடித்த 'மெசஞ்சர் ஆப் காட்'(கடவுளின் தூதர்) என்ற படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் லீலா சாம்சன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய சென்சார் போர்டு இந்த படத்துக்கு அனுமதி மறுத்து விட்டது. ஆனால் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக லீலா சாம்சன் சென்சார் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இதை தொடர்ந்து மத்திய சென்சார் போர்டு உறுப்பினர்கள் 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

We will put in place an entirely new board within the next few days: I&B Minister

மத்திய சென்சார் போர்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் போர்டு உறுபினர்கள் ராஜினாமா குறித்தும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறியதாவது:

சென்சார் போர்டு உறுப்பினர்களிடமிருந்து நான் இதுவரை எந்த கடிதமும் பெறவிலை. ஆனால் இது ஒரு பெரிய விஷயமே இல்லை. போர்டை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று இது தான் விஷயமாகும், நாங்கள் அடுத்த சில நாட்களில் முற்றிலும் புதிதாக ஒரு குழுவை அமைப்போம்.

சென்சார் போர்டு அதிகாரிகள் ராஜினாமா விவகாரத்தில், அமைச்சகம் தலையிடாடு. சமீபத்தில் இரு திரைப் படங்களால் மிக அதிகமான சர்ச்சை எழுந்து உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

English summary
It's just a matter of days, we will put in place an entirely new board within the next few days, says I&B Minister of State Rajyavardhan Rathore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X