பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா.. தேர்தல் நெருங்கும்போது திரிணாமுலில் ஐக்கியமான முக்கிய புள்ளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக சிட்டிங் எம்எல்ஏ திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளார். அங்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ ஒருவரே திரிணாமுலில் சேர்ந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு உடன் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சீக்கிரமே தேர்தல் நடக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் 4வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளது. இதற்கிடையே தேர்தல் நெருங்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது..

பாஜகவுக்கு அதிர்ச்சி
அங்கு குர்சியோங் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான பிஷ்ணு பிரசாத் சர்மா, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்த அவர், இன்று பாஜகவில் இருந்து விலகி ஆளும் திரிணாமுல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் பவனில் அவர் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
தனி கூர்காலந்து மாநிலக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பிஷ்னு பிரசாத் சர்மாவுக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற இவர், 2024 மக்களவைத் தேர்தலில் தார்ஜீலிங் பாஜக வேட்பாளருக்கு எதிராகவே சுயேச்சையாகப் போட்டியிட்டார். அந்தளவுக்கு அதிருப்தியில் இருந்தார்.
பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டு
டார்ஜீலிங் மலைப் பகுதியையும் அதன் வளர்ச்சியையும் பாஜக புறக்கணிப்பதாகப் பிஷ்ணு பிரசாத் சர்மா குற்றம் சாட்டியிருந்தார். பிராந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தாக அளித்த உறுதிமொழிகளை பாஜக செயல்படுத்தத் தவறிவிட்டதாகச் சாடினார்.
பாஜகவில் பிற தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியுடன் அவர் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார். பிரசாத் சர்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட சுவேந்து அதிகாரி தான் அவருக்குச் சிகிச்சை ஏற்பாடு செய்தார். பிரசாத் கட்சித் தலைமை மீது கோபத்தில் இருந்தாலும், திரிணாமுலில் சேர மாட்டார் என்று சுவேந்து உறுதியாகக் கூறியிருந்தார். அப்படியிருக்கும்போது தான் திடீரென ட்விஸ்ட் கொடுத்துள்ளார் பிரசாத் சர்மா!
விலகியே இருந்தார்
கடந்த ஓராண்டாகவே பிஷ்ணு பிரசாத், சட்டமன்றத்தில் உள்ள பாஜகவின் கட்சி அறைக்குள் செல்லவில்லையாம். செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "எனது கருத்துகளுடன் ஒத்துப் போகாதவர்களுடன் நான் நெருங்க மாட்டேன்" என்று கூறியிருக்கிறார். சட்டசபையாக இருந்தாலும் சரி, வெளியேயும் சரி, நிகழ்ச்சிகளில் இருந்து விலகியே இருந்தார்.
அவர் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ள நிலையில், இது சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் மட்டுமின்றி நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலிலும் கூட இது பின்னடைவை ஏற்படுத்தலாம்.
பாஜக விளக்கம்
அதேநேரம் இது தங்களுக்கு அதிர்ச்சியை எல்லாம் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் விலகுவார் என்பது தெரிந்த ஒன்று தான் என்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கோஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், "அவர் பல காலமாகவே பாஜகவில் இருந்து விலகியே இருந்தார். அவரை தங்கள் பக்கம் ஈர்க்கத் திரிணாமுல் ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். திரிணாமுல் மற்றும் பிஷ்ணு பாபு இருவரும் தேர்தலில் தோற்க போகிறார்கள். அவரது விலகல் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை" என்றார்.
-
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications