மின்னல் வேகத்தில் விற்று தீரும் ஆணுறைகள்! காண்டம் மூலம் போதை.. இளைஞர்கள் செயலால் மிரளும் அதிகாரிகள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் போதை ஏற்றிக் கொள்ள மாணவர்கள் பயன்படுத்தும் விஷயம் அங்குள்ள அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் புகையிலை பயன்பாடு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதேபோல மது பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது
இதுபோன்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட, நம்ம ஊரில் தான் பல வித்தியாசமான பொருட்களைப் போதைக்காகப் பயன்படுத்துகிறார். அப்படியொரு சம்பவம் தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறி உள்ளது.

போதைக்கு
எதற்கு இத்தனை வாங்குகிறார்கள் என முதலில் தெரியாமல் இருந்தது. அதன் பின்னரே சில இளைஞர்கள் அவற்றைப் போதைப்பொருளாகப் பயன்படுத்துவது தெரிய வந்தது. இது குறித்து தினமும் எனது கடைக்கு வரும் இளைஞர் ஒருவரிடம் கேட்டேன். அவர் தான் போதைக்காகவே ஆணுறைகளை வாங்குவதாகத் தெரிவித்தார்" என்று அவர் தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள்
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், "flavored ஆணுறைகளைச் சுடுநீரில் ஊறவைக்கும்போது, ஒருவித ஆல்கஹால் கலவை வெளியாகிறது. மாணவர்கள் அந்த நீரைப் போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆணுறைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைக்கும் அவர்கள், இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுகின்றனர். அதன் பின்னர், இதைக் குடிக்கும் போது, கிட்டத்தட்ட 10 முதல் 12 மணி நேரம் வரை போதை தருகிறது" என்று கூறினர்.

என்ன நடக்கும்
அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகையில், "ஆணுறைகளில் சில நறுமண கலவைகள் உள்ளன. அதைத் தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்தும் போது, அது உடைந்து ஆல்கஹால் உருவாகிறது. ஆணுறைகளை நீண்ட நேரம் சூடான நீரில் ஊறவைப்பதால், பெரிய கரிம மூலக்கூறுகள் ஆல்கஹால் சேர்மங்களாக சிதைவதால் போதை ஏற்படுகிறது. இதில் கிடைக்கும் போதைக்கு அவர்கள் விரைவில் அடிமையாகிவிடுவார்கள்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

வினோதம்
அதேநேரம் போதைக்காக வினோதமான முறைகளை இளைஞர்கள் கடைப்பிடிப்பது இது முதல்முறை இல்லை. இருமல் சிரப், பசை, பெயிண்ட், நெயில் பாலிஷ், ஹேண்ட் சானிடைசர்கள், தைலம் போன்றவற்றையும் கூட சிலர் போதைக்குப் பயன்படுத்தி உள்ளனர். நைஜீரியாவில், போதை பழக்கத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் டூத்பேஸ்ட் மற்றும் ஷூ பாலிஷ் விற்பனை அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications