For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுடைய 750 ஜோடி கலர் கலர் செருப்புகள், தங்க நகைகள் என்னாகும்?

மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்பு மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகையாக பெறப்பட உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவரை விடுத்து மற்ற 3 பேரும் தண்டனை சிறை செல்ல உள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்புகள் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்தம் ரூ. 140 கோடி அபராதத் தொகையை கோர்ட் வசூலிக்கவுள்ளது.

ரூ.100 கோடி அபராதம்

ரூ.100 கோடி அபராதம்

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். எனவே, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் ஏலம் விடப்பட்டு செலுத்தப்பட உள்ளது.

750 ஜோடி செருப்பு

750 ஜோடி செருப்பு

ஜெயலலிதா வீட்டை ரெய்ட் செய்த போது, 750 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. மேலும், 10,500 புடவைகள்,750 பட்டுப் புடவைகள் மற்றும் 3.5 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து கர்நாடக மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எங்கே?

ஏலம் எங்கே?

இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் கட்ட வேண்டிய அபராதத் தொகை கட்டப்பட வேண்டும். அதற்காக கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் செருப்புகள், புடவைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு வர உள்ளது.

அபராதம்

அபராதம்

பின்னர், அவை அனைத்தும் ஏலம் விடப்படும். இதன் மூலம் கிடைக்கப் பெறும் பணம் அனைத்தையும் ஜெயலலிதாவின் கட்டப்பட வேண்டிய அபராதத் தொகையாக நீதிமன்றத்திற்கு கட்டப்படும்.

English summary
The seized items inclusind slippers and jewells will be sent back to Tamil Nadu which in turn in would have to auction the same to recover the fine amount.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X