For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் பதற்றம்.. ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிப்பு.. காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் வழியில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகள் அண்மையில் இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆயுத கிடங்கில் தயாரிக்கப்பட்டது.

இதனால் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது என்பதால் அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சொந்த ஊர்களுக்கு திரும்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீரர்கள்

வீரர்கள்

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் காஷ்மீருக்கு ஆயிரக்கணக்கிலான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்

ஆளுநர்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்காகவே இந்த ராணுவ படைகள் குவிப்பு என்று பேசப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் ஆளுநர் சத்யபால் சிங்கை சந்தித்து பேசினர்.

தகவல்கள்

தகவல்கள்

அப்போது பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் விளக்கம்

ஆளுநர் விளக்கம்

இதையடுத்து கல்லூரி விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். துர்கை அம்மன் யாத்திரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளை வெளியேற்றுவது போன்ற நிகழ்வுகள் இதுவரை நடந்ததில்லை என்பதால் மக்களுக்கும் அரசியல்வாதிகளும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் என ஆளுநர் விளக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Thousands of Army personnel are deployed in Kashmir. Why so much tension in Kashmir?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X