உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது? உடற்பயிற்சி செய்றீங்களா? நிர்வாகி பற்றி மம்தா பானர்ஜி கலகல

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சி பிரமுகரின் உடல்நலனில் அக்கறை கொண்டு எடை குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்டார். உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது?, உடற்பயிற்சி செய்றீங்களா? என மம்தா பானர்ஜி கனிவுடன் கேட்டார்.

மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் மம்தா பானர்ஜி கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக கட்சியின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உள்ளாட்சி அளவிலான நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

 மம்தா பானர்ஜி கேள்வி

மம்தா பானர்ஜி கேள்வி

அந்த வீடியோவில், முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கட்சி பிரமுகரின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு எடை கூடியது பற்றி கேள்விகள் எழுப்புகிறார். அதற்கு அந்த நபர், தான் நலமாக உள்ளேன். ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் என எதுவும் இல்லை. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருகிறேன் என அவர் கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. அந்த வீடியோவில் நடந்த உரையாடல் வருமாறு:

வயிறு எப்படி வளர்கிறது?

வயிறு எப்படி வளர்கிறது?

மம்தா பானர்ஜி, "உங்களின் வயிறு எப்படி வளர்கிறது. இப்படி இருந்தால் மயங்கி விழுந்துவிடுவீர்கள். உடல்நலம் சரியில்லையா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பிரமுகர், ‛‛நான் நன்றாக இருக்கிறேன். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என எதுவும் இல்லை'' என மம்தா பானர்ஜியிடம் கூறினார். ஆனால் மம்தா பானர்ஜி விடவில்லை. மாறாக, ‛‛இல்லை. நிச்சயமாக ஏதாவது பிரச்சனை இருக்கு. இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய தொப்பை வந்திருக்காது. தினமும் நீங்கள் நிறைய சாப்பிடுகிறீர்களா? நீங்கள் நடக்கிறீர்களா?'' என கூறினார். இதைக்கேட்டு மற்றவர்கள் சிரிக்க தொடங்கினர்.

 மூச்சுப்பயிற்சி செய்வதாக...

மூச்சுப்பயிற்சி செய்வதாக...

இதற்கு அவர், ‛‛காலையில் பக்கோடி சாப்பிடுகிறேன். இது பழக்கமாக உள்ளது. ஆனால் தினமும் நான் 3 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். 1000 முறை மூச்சை உள்இழுத்து வெளியே விடும் மூச்சுப்பயிற்சி செய்கிறேன்'' என்றார். இதற்கு மம்தா பானர்ஜி, ‛‛நீங்கள் ஏன் தினமும் பக்கோடி சாப்பிடுகிறீர்கள்?. இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியாது. 1000 முறை மூச்சுப்பயிற்சி செய்கிறீர்களா?. இப்போது செய்தால் ரூ.10 ஆயிரம் தருகிறேன்'' என்கிறார்.

வீடியோ

வீடியோ

தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் லைக்குகள் வழங்குவதோடு, நிர்வாகி மீது கட்சி தலைவர் கவனமாக செயல்படுகிறார். இதுபோன்று எந்த கட்சி தலைவர்களும் இல்லை என பெருமையாக பேசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+