For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய விரைவில் அரசாணை பிறப்பிப்பு: கர்நாடக சட்ட அமைச்சர்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு முடிவை எடுப்பதில் எந்தவித நெருக்கடியும் ஏற்படுத்தப்படவில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Will pass G.O. soon facilitating the appel of Jaya's case: Karnataka

இந்நிலையில் இது குறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தீர்க்கமாக உள்ளது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நடத்த மட்டும் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.5.12 கோடி செலவாகியுள்ளது என்றார்.

English summary
Karnataka law minister Jayachandra told that soon a government order will be passed to enable the government to appeal against the verdict of Jayalalithaa's appeal case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X