For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி இளவரசர்கள் 11 பேர் கூண்டோடு கைது.. அரசு தெரிவிக்கும் இரண்டு காரணங்கள் என்ன?

சவுதி அரேபியாவின் இளவரசர்கள் 11 பேர் அந்நாட்டு அரசால் கூண்டோடு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதி இளவரசர்கள் 11 பேர் கூண்டோடு கைது..வீடியோ

    ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர்கள் 11 பேர் அந்நாட்டு அரசால் கூண்டோடு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இளவரசர்கள் இப்படி மொத்தமாக கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    முதலில் இதற்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு அரசு இரண்டு விதமான காரணங்கள் தெரிவித்து இருக்கிறது.

    சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். வரிவிதிப்பு முறை தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை அந்த நாடு பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.

    போராட்டம் நடத்தினர்

    போராட்டம் நடத்தினர்

    சவுதியின் இளவரசர்கள் 11 பேர் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் குறைவாக நடக்கும் சவுதியில் இப்படி இளவரசர்கள் சேர்ந்து போராட்டம் செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் ரியாத்தில் இந்த போராட்டம் நடந்தது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டனர்.

    காரணம் 1

    காரணம் 1

    சவுதியில் சில நாட்களுக்கு முன் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதேபோல் சவுதி அரசு குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச தண்ணீர் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே போராட்டம் செய்து உள்ளனர்.

    காரணம் 2

    காரணம் 2

    இதற்கு தற்போது இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. சவுதி இளவரசர் ஒருவர் கடந்த 2016ம் வருடம் அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டார். தற்போது அதற்கு இழப்பீடு வேண்டும் என்று இந்த அரச குடும்ப வாரிசுகள் கோரிக்கை வைத்து உள்ளார். அதற்கான போதிய பணம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    கைது செய்யப்பட்டனர்

    கைது செய்யப்பட்டனர்

    போராட்டம் செய்த அவர்களை போலீஸ் அமைதியாக செல்ல சொல்லியும் அவர்கள் செல்லவில்லை. இதனால் மக்களின் அமைதிக்கு இடைஞ்சலாக இருந்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தற்போது அவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.

    English summary
    11 Saudi Arabia princes were arrested over protesting in Riyadh. Saudi Arabia has introduced Value Added Tax today. They have opposed this tax system.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X