For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணை "உறுத்தும்" நடிகைகள்.. அதிர்ந்து போன பெண்கள்.. தாலிபன்கள் தந்த அடுத்த ஷாக்.. இப்ப என்னாச்சு?

ஆப்கனில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்படஉள்ளதாம்

Google Oneindia Tamil News

காபூல்: ஒரு வருடத்துக்கு பிறகு, ஆப்கனில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.. ஆனால், ஒரு வருத்தமான செய்தியும் வெளியாகி உள்ளது.
ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்கள், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரவில்லை.

எதிர்பார்த்தபடியே ஆடைக்கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது.

ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - தாலிபன் நிலைப்பாடு என்ன?ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - தாலிபன் நிலைப்பாடு என்ன?

 சீக்ரெட் ஸ்கூல்

சீக்ரெட் ஸ்கூல்

திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆனபோதிலும், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. பெண் குழந்தைகளால் பள்ளிக்கு ஒருவருடமாகவே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

 பொம்மைகள்

பொம்மைகள்

ஓராண்டாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பணி நிமித்தமாக நிறைய கெடுபிடிகள் பிறப்பித்தனர்.. இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டது.. அதுமட்டுமல்ல, ஜவுளி கடைகளில் வைக்கப்படும் பெண் பொம்மைகளுக்கு தலைகூட இருக்க கூடாதாம்.. அதாவது ஆப்கன் நகரில், கடை வாசலில் ஆளுரயத்தில் பொம்மைகளை வைத்து, அதற்கு புதிய புதிய ஆடைகளை அணிய வைத்திருப்பார்கள்..

 தலை வெட்டுங்கள்

தலை வெட்டுங்கள்

இந்த பொம்மைகளின் தலைகளை எல்லாம் வெட்ட சொல்லி விட்டனர். இப்படி தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிரானது சொல்லி, பொம்மைகளின் தலைகளை கடைக்காரர்கள் வெட்டி எடுத்துவிட்டனர். ஏற்கனவே இங்கு பெண்கள் பாட்டு பாட தடை விதிக்கப்பட்டது.. டான்ஸ் ஆட தடை விதிக்கப்பட்டது.. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததுமே சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர்.

 டாக்குமெண்ட்டரி

டாக்குமெண்ட்டரி

இந்நிலையில்தான், ஒரு வருடத்துக்கு பிறகு அங்குள்ள சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்... ஆனாலும் பெண்கள் சினிமாவில் நடிக்க தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மறுபடியும் தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் அங்கு 37 சினிமா படங்களும், சில ஆவணப்படங்களும் திரையிட தயாராக இருக்கின்றன.. ஆனால் இந்த அனைத்து படங்களிலும் நடிகையாக அதிபா முகமது என்ற பெண் மட்டுமே நடித்துள்ளார் என்பதுதான் ஸ்பெஷல் செய்தி.

நடிகைகள்

நடிகைகள்

இதனால் அங்கு பெண்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடைகளின்றி அனுமதி தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.. ஒருவருடம் கழித்து தியேட்டர்கள் திறந்தாலும், நடிகர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்.. நடிகைகள் வாழ்வாதாரங்கள் மேலும் நலிவடைந்து வருவதால், நடிக்க அனுமதி கேட்டு வருகிறார்கள். சிலமாதங்களுக்கு முன்பு, பெண்கள் காபூல் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய நகரங்களில் பெண்கள் டூவீலரில் வந்துள்ளனர்.. இதை நேரில் பார்த்ததுமே, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்தி விட்டார்கள் தாலிபன்கள்.. அப்படி இருக்கும்போது, நடிக்க அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

English summary
2.0 Taliban: Afghan cinemas to resume after one year, role of women cut in movies ஆப்கனில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்படஉள்ளதாம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X