ஈராக்- ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3 ஆக பதிவு; பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

Written By:
Subscribe to Oneindia Tamil
  ஈராக்- ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ

  ஹலாப்ஜா: ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.

  ஈராக்கில் இன்று அதிகாலை ஹலாப்ஜா நகரம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

  7.2 magnitude earthquake strikes Iran-Iraq border region

  இது ரிக்டரில் 7.3ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. 70,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

  சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், துபாய், இஸ்ரேல் என பல நாடுகளையும் அதிரவைத்தது. கடந்த 2003-ம் ஆண்டு ஈரானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 26,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  An earthquake of magnitude 7.2 has hit the border region between Iran and Iraq.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற