3.7 கோடி கொரோனா கேஸ்.. ஒரே நாளில் நொடிந்த "சீனா".. மறுநாளே எடுத்த அதிர்ச்சி முடிவு.. எவ்வளவு திமிர்?
பெய்ஜிங்: நேற்று சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு முக்கியமான முடிவு ஒன்றை இன்று எடுத்துள்ளது.
கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. சீனாவில் தினசரி கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே கடந்த நவம்பருக்கு முன்பாகவே குணமடைந்துவிட்டனர்.

சீனா
சீனாவில் நேற்று மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். 3.7 ஆயிரம் பேர் அல்ல.. 3.7 கோடி பேர்.. அதாவது கிட்டத்தட்ட கேரளாவின் மக்கள் தொகை மொத்தமாக ஒரே நாளில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டால் எப்படி இருக்கும். அந்த அளவிற்கு சீனாவில் ஒரே நாளில் கேஸ்கள் ஏற்பட்டு இருக்கின்றன. நேற்று ஒரே நாளில் இந்த பாதிப்பு அங்கு பதிவாகி உள்ளது. உலக அளவில் இது புதிய ரெக்கார்ட் ஆகும். உலகில் இதற்கு முன் எங்கும் ஒரே நாளில் இவ்வளவு கேஸ்கள் பதிவானதே கிடையாது.

கொரோனா
கொரோனா இந்தியாவில் உச்சத்தில் இருந்த போது கூட டெல்டாவைரஸ் காரணமாக இவ்வளவு பாதிப்பு ஏற்படவில்லை. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24.8 கோடி பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தனை கேஸ்களும் கடந்த 20 நாட்களில் பதிவான கேஸ்கள் என்று கூறப்படுகிறது. சீனாவை கொரோனா உடைத்து போட்டு இருக்கிறது. இதற்கு முன் சீனாவில் ஒரே நாளில் 40 லட்சம் கேஸ்கள் பதிவானதுதான் ரெக்கார்டாக இருந்தது. அதை சீனா முறியடித்து உள்ளது.

முடிவு
இதையடுத்து மறுநாளே.. அதாவது இன்றில் இருந்து சீனா தினசரி கொரோனா கேஸ் எண்ணிக்கைகளை வெளியிடுவதை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது. சீனாவின் இந்த முடிவை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இனி தினசரி கொரோனா கேஸ்கள் பற்றிய அப்டேட்டை சீனா வெளியிடாது. எத்தனை பேர் பாதித்து உள்ளனர். எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்று கணக்கு எடுக்கப்படும். ஆனால் இந்த கணக்கு பொதுவில் வெளியிடப்படாது என்று சீனா தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சீனா இது தொடர்பான டேட்டாக்களை வெளியிட மறுப்பதாக உலக சுகாதார மையம் விமர்சனம் வைத்து இருந்தது.

என்ன சொன்னார்?
இது தொடர்பாக உலக சுகாதார மைய தலைவர் டெட்ராஸ் ஆதனம் அளித்துள்ள பேட்டியில், கொரோனா டேட்டாக்களை சீனா பெரிதாக எங்களிடம் கொடுப்பது இல்லை. அதாவது கொரோனாவின் ஜீன் விவரங்களை சீனா கொடுப்பது இல்லை. இந்த கொரோனா பரவல் குறித்த விவரங்களை சீனா தொடர்ந்து எங்களிடம் வெளியிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அதேபோல் இந்த பரவல் தொடர்பாக சோதனை நடத்தவும் சீனா எங்களுக்கு அனுமதி தரும் என்று நினைக்கிறோம். இதை பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம். கொரோனா எப்படி தோன்றியது என்பது இன்னும் தெரியவில்லை. இதை பற்றி அனைத்து விதமான வாதங்களையும் புறக்கணிக்காமல் நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம். இப்போது கொரோனாவின் தீவிரம் குறித்து அறிய வேண்டும், களத்தில் என்ன நிலைமை இருக்கிறது என்று அறிய வேண்டும். அதற்கு இந்த நோய் மூலம் பாதிக்கப்படும் நபர்களின் உடல்நிலை, அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலை, எத்தனை பேர் ஐசியூவில் இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் தேவை, என்று குறிப்பிட்டு இருந்தார்.

காரணம் என்ன?
ஓமிக்ரானின் கிளை வைரஸ் வகைகளான ஓமிக்ரான் BF.7, BF 12 ஆகிய வைரஸ்கள் சீனாவில் பரவி வருகின்றன. இதெல்லாம் இந்த வருட தொடக்கத்திலேயே உருவான வைரஸ்கள்தான். ஓமிக்ரான் வகை கொரோனாவில் 10க்கும் மேற்பட்ட கிளை வகைகள் உள்ளன. இதில் BF.7, BF 12 வகைகள் தான் தற்போது சீனாவில் அதிகம் பரவுகிறது. ஓமிக்ரான் பரவ பரவ, அவை லேசாக திரிபு அடைந்து இந்த கிளை வகைகள் உருவாகி உள்ளன. இதில் BF.7 வகை கொரோனா தொடக்கத்தில் சீனாவில் பரவிய ஆதி கொரோனாவான D614G வகையை விட 4.4 மடங்கு வலிமை வாய்ந்தது. இதன் அர்த்தம் இந்த கொரோனா இன்னும் வேகமாக பரவும். சமயங்களில் ஏற்கனவே கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் இது தாக்கும். ஏனென்றால் கொரோனா வேக்சின் என்பது பழைய கொரோனாவை அடிப்படையாக வைத்து உருவாக்கியது. BF.7 மற்றும் BF.12 இரண்டிலும் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இது புதிய வகை கொரோனா என்பதால் நாம் போட்டிருக்கும் வேக்சின்கள் பலன் அளிக்காமல் போகலாம். இதனால் வேக்சினில் இனி வரும் நாட்களில் லேசான மாற்றங்களை செய்து மீண்டும் விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications