என் கூட *....* இல்லைனா இன்னும் 20 பேர் வருவாங்க! 16 வயது சிறுமியை சிதைத்த ராணுவ வீரர்! பகீர் புகார்
கீவ் : ரஷ்ய ஆக்கிரமிப்பு கிராமமான உக்ரைனின் கெர்சன் கிராமத்தில் குடிபோதையில் ரஷ்ய ராணுவ வீரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 16 வயது சிறுமியை தன்னுடன் படுக்கை பகிர்ந்து கொள்ளவிட்டால் மேலும் 20 பேரால் பலாத்காரம் செய்யப்படுவாய் என மிரட்டியதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடங்கி 60 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அங்கு நிலைமை மிக தீவிரமாக மோசமாகி வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.
உக்ரைன் படைகளின் தீவிர எதிர் தாக்குதல் காரணமாக தலைநகர் கீவ்வை இதுவரை ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்ற முடியாத நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தாக்குதலை ரஷ்யப் படைகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பகீர் புகார்
மேலும் ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டில் இருக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உடல்களில் முத்திரை குத்துவதாகவும் மேலும் ஒரு பகீர் புகார் எழுந்தது. ரஷ்ய ராணுவ வீரர்களை கொலைகாரர்கள், கொடூரர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் எனவும், இவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகக் கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் நாளுக்கு நாள் ரஷ்ய ராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

ரஷ்யாவின் அத்துமீறல்
இந்நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் கெர்சன் கிராமத்தில், குடிபோதையில் ரஷ்ய ராணுவ வீரரால் 16 வயது சிறுமி பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "ஒன்று நீ இப்போது என்னுடன் தூங்கு , அல்லது நான் இன்னும் 20 ராணுவ வீரர்களை நான் அழைத்து வருவேன் எனக் கூறி மிரட்டியதாக ராணுவ வீரர்களிடமிருந்து தப்பிய அந்த சிறுமி கூறியுள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில், அந்த சிறுமி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. குடிபோதையில் இருந்த ராணுவ வீரர் தன் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும், தனக்கு உடன்படா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. உயிர் பிழைத்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க தங்கள் வீட்டின் அடித்தளத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், மாலையில் சாப்பிடுவதற்காக வெளியே வந்த போது, குடிபோதையில் இருந்த ராணுவ வீரர் அவர்களை கண்டு அத்து மீறியுள்ளார்.
Recommended Video

சிறுமிக்கு மிரட்டல்
குழந்தைகளின் வயது என்ன என்று அவர் கேட்டார். 12 மற்றும் 14 வயதில் இரண்டு பெண்கள் இருந்தனர், எனக்கு 16 வயது. அவர் முதலில் என் அம்மாவை அழைத்தார், ஆனால் அவரை விரைவாக அனுப்பிவிட்டு பின்னர் என்னை அழைத்தார். நான் சென்றபோது என் ஆடைகளை அவிழ்க்கச் சொன்னார். நான் வேண்டாம் என்று சொன்னபோது, நான் அவனுடன் தங்காவிட்டால் இன்னும் 20 பேரை அழைத்து வருவேன் என மிரட்டியதாகவும், ஆனால் குடிபோதையில் இல்லாத மற்றொரு ரஷ்ய சிப்பாய் அவரது செயலை நிறுத்தச் சொல்லியும் அவர் கேட்கவில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications