ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாம், இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் திருவிக நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான நட்சத்திர வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சூழலில், இரண்டாம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் 46 சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் 17 பெண் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 150 பேரில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று மூன்றாம், இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் திருவிக நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார். சென்னையில் 12 தொகுதிகள் உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்குப் பிறகு, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநிலத் தலைவர் ஆனந்தன் என்பவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஏப்ரல் 2025-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, இவரைப் பொறுப்பிலிருந்து நீக்கி இருந்தர். தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 5, 2025 அன்று, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' (Tamil Maanila Bahujan Samaj) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
தற்போது தனது புதிய கட்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், தனது கணவரின் படுகொலைக்கு நீதி கோரியும் பொதுவாழ்வில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் தான் இன்று அவருக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு












Click it and Unblock the Notifications