For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளூட்டோ ஓவர்.. வேறு 2 தொலை தூர குட்டிக் கிரகங்களை ஆராயப் போகிறது நியூ ஹாரிஸான்ஸ்

Google Oneindia Tamil News

நாசா: புளூட்டோவை நெருங்கி அதை வளைத்து வளைத்துப் படம் எடுத்து அனுப்பி வைத்து சாதனை படைத்த நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் தற்போது புளூட்டோவை விட்டு விலகி அதற்கு அப்பால் செல்லத் தொடங்கியுள்ளது. இருப்பினும் அது தொடர்ந்து பல்வேறு தகவல்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வருகிறதாம். அடுத்து புளூட்டோவைத் தாண்டி உள்ள 2 குட்டிக் கிரகங்களை ஆராயப் போகிறது நியூ ஹாரிஸான்ஸ்

நாசா அனுப்பிய விண்கலமான நியூ ஹாரிஸான்ஸ், சூரியக் குடும்பத்தின் கடைசி கிரகமான புளூட்டோவை மிக அருகில் நெருங்கி ஜூலை 14ம் தேதி புதிய அத்தியாயத்தைப் படைத்தது.

புளூட்டோவிலிருந்து 12,500 கிலோமீட்டர் என்ற நெருக்கமான தொலைவில் அது புளூட்டோவைக் கடந்து அந்த குள்ள கிரகத்தின் தோற்றம், அதன் நிலவுகள் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தது.

அரிய தகவல்கள் - படங்கள்

அரிய தகவல்கள் - படங்கள்

புளூட்டோ கிரகம் குறித்த பல புதிய, அரிய தகவல்கள், புகைப்படங்களை நியூ ஹாரிஸான்ஸ் நமக்கு அனுப்பி வைத்தது. இதன் மூலம் இதுவரை நாம் அறிந்த புளூட்டோ குறித்த தகவல்களில் பல மாற்றங்களை நாம் காண முடிந்தது.

புளூட்டோவை விட்டு விலகிச் செல்கிறது

புளூட்டோவை விட்டு விலகிச் செல்கிறது

தற்போது புளூட்டோவை விட்டு வேகமாக விலகிச் செல்கிறது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம். தற்போது புளூட்டோவைத் தாண்டியுள்ள அண்டவெளிப் பகுதியில் (இதை கியூப்பர் பெல்ட் என்பார்கள்) வேகமாக செல்ல ஆரம்பித்துள்ளது நியூ ஹாரிஸான்ஸ். கியூப்பர் பெல்ட் என்பது சூரியக் குடும்பத்தின் எல்லையின் கடைக்கோடிப் பகுதி ஆகும்.

தொடர்ந்து வரும் தகவல்கள்

தொடர்ந்து வரும் தகவல்கள்

கியூப்பர் பெல்ட் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் கூட தொடர்ந்து பல தகவல்களை நியூ ஹாரிஸான்ஸ் பூமிக்கு அனுப்பி வருகிறதாம்.

புளூட்டோவின் இரவு குறித்த ஆய்வு

புளூட்டோவின் இரவு குறித்த ஆய்வு

இதுகுறித்து நியூ ஹாரிஸான்ஸ் முதன்மைத் திட்டத் தலைவரான ஆலன் ஸ்டெர்ன் கூறுகையில், தற்போது விண்கலம் புளூட்டோவை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளது. புதிய கோணத்தில் அது பல புதிய தகவல்களை அனுப்பி வருகிறது. குறிப்பாக புளூட்டோவின் இரவு குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. அதை ஆய்ந்து வருகிறோம் என்றார்.

விடை பெறுகிறது நியூ ஹாரிஸான்ஸ்

விடை பெறுகிறது நியூ ஹாரிஸான்ஸ்

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 3 கட்டமாக பிரியாவிடை பெறவுள்ளது நியூ ஹாரிஸான்ஸ். அத்துடன் அதன் பயணம் முடிவடையும். தற்போது முதல் கட்ட பிரிவில் அது உள்ளது. நியூஹாரிஸான்ஸின் பயணம் முடிந்தாலும் கூட தொடர்ந்து நமக்கு தகவல்கள் வந்தபடி இருக்குமாம் - அது உயிருடன் இருக்கும் வரை.

ஆனால் தாமதமாக வரும்

ஆனால் தாமதமாக வரும்

ஆனால் குறித்த காலத்தையும் தாண்டி நமக்கு தகவல்கள் அனுப்பும்போது அது மிக மிக தாமதமாக வந்து சேரும். அதாவது விநாடிக்கு 2 கிலோபைட் என்ற வேகத்தில்தான் தகவல்கள் வருமாம். இருப்பினும் அதற்குள் நமக்கு போதுமான தகவல்கள் கிடைத்து விடுமாம்.

9 நாளில் 50 ஜிகாபைட் தகவல்கள்

9 நாளில் 50 ஜிகாபைட் தகவல்கள்

புளூட்டோ கிரகத்தை அது நெருங்கிக் கடந்தபோது 9 நாட்களில் 50 ஜிகாபைட் என்ற அளவில் தகவல்களை அது நமக்கு அனுப்பியுள்ளது. இதில் தற்போது நமக்கு 2 சதவீத தகவல்கள் மட்டுமே பூமியை வந்தடைந்துள்ளது.

சுருக்கப்பட்ட தகவல்கள்

சுருக்கப்பட்ட தகவல்கள்

நமக்கு ஆரம்பத்தில் சுருக்கப்பட்ட அதாவது கம்ப்ரஸ்ட் டேட்டாக்கள் வந்து கொண்டிருந்தன. செப்டம்பர் மாதம் நியூ ஹாரிஸான்ஸ் மெமரியில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுக்கும் முயற்சிகள் தொடங்குள்ளன. இதை முழுமையாக செய்து முடிக்க 10 முதல் 12 வாரங்களாகுமாம்.

இரண்டு புதிய இலக்குகளை ஆராய நடவடிக்கை

இரண்டு புதிய இலக்குகளை ஆராய நடவடிக்கை

புளூட்டோவை விட்டு முழுமையாக விலகிய பின்னர் புளூட்டோவிலிருந்து 1.6 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு இலக்குகளை ஆராயும் பணியில் நியூஹாரிஸான்ஸ் ஈடுபடவுள்ளது.

2014 எம்யு 69 - 2014 பிஎன்70

2014 எம்யு 69 - 2014 பிஎன்70

அவை 2014 எம்யு 69 மற்றும் 2014 பிஎன்70 ஆகியவை ஆகும். இவை புளூட்டோவை விட வேறு மாதிரியான இலக்குகள் ஆகும். இதில் முதலில் எந்த இலக்கை நியூ ஹாரிஸான்ஸ் ஆராயப் போகிறது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது. எனவே நாசா மற்றும் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தின் பயணம் வேறு பாதையில் தொடரப் போகிறது.

English summary
NASA's New Horizons spacecraft has completed its highly anticipated close flyby of Pluto, but the probe's work at the outer reaches of the solar system is far from done.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X