For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவு முழுவதும் ஏற்பட்ட நில அதிர்வுகள்: தூங்காமல் பயத்தில் பொழுதை கழித்த இந்தோனேசிய மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேசியாவில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இரவு முழுவதும் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் தூங்காமல் இருந்தனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே புதன்கிழமை மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 15 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. இதையடுத்து சுமத்ரா தீவில் உள்ள பதாங் பகுதியில் சுனாமி ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. உடனே மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உயரமான இடங்களுக்கு சென்றனர்.

Aftershocks rock Indonesia after massive quake

நல்ல வேளையாக சுனாமி ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் பயத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் இரவு நேரத்தில் தூங்க வீடுகளுக்கு செல்லவில்லை. மக்கள் இரவு பொழுதை தெருக்களில் கழித்தனர்.

நிலநடுக்கத்தை அடுத்து ஏற்படும் ஆஃப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் இரவு முழுவதும் ஏற்பட்டது. 6 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தூங்காமல் பயத்தில் இரவை கழித்தனர்.

பதாங் நகரில் இன்று வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. 10 லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரில் நிலநடுக்கத்தால் குறைந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் நில அதிர்வுகள் ஏற்படுவது சகஜம். அதனால் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டபோது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு மோசமாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
People of Sumatra island in Indonesia had sleepless night after massive quake hit there on wednesday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X