Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டாலும் வரி! நியூசிலாந்தில் புதிய திட்டம்..ஏன் தெரியுமா? காரணத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: இந்தியா உள்பட பல நாடுகளில் மக்கள் அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் நியூசிலாந்தில் ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டாலும் அதன் உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டும் என்பதற்கான புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் தற்போது பெரும் பிரச்சனையாக பூமி வெப்பமயமாதல் உள்ளது. இதனால் பருவகாலம் முற்றிலும் மாறுபட்டு மனிதர்கள், விலங்குகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் பேசி வருகின்றனர். மேலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

 நியூசிலாந்தில் புதிய வரி விதிப்பு

நியூசிலாந்தில் புதிய வரி விதிப்பு

அந்த வகையில் தான் தற்போது நியூசிலாந்து பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தனித்துவமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஆடு, மாடுகள் உள்ளிட்ட பண்ணை விலங்குகள் ஏப்பம் விடுவதற்கும், சிறுநீர் கழித்தல் உள்ளிட்டவற்றுக்கும் தனியாக வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயிகள் எதிர்ப்பு

இதுதொடர்பான விவாதம் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே நடந்து வந்த நிலையில் தற்போது இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. என்னங்க இது ஆடு, மாடுகள் ஏப்பம் விடுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கு கூட வரியா என அந்நாட்டு விவசாயிகள் கேள்வியை எழுப்பி கொந்தளித்து தற்போது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

உறுதியாக உள்ள அரசு

உறுதியாக உள்ள அரசு

இருப்பினும் நியூசிலாந்து அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதன்படி பர்ப்பிங் என்ற பெயரில் ஆடு மாடுகளுக்கான ஏப்பத்துக்கு வரியும், பீயிங் என்ற பெயரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சிறுநீர் கழிப்பதற்கும் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் ஏப்பம், சிறுநீர் கழித்தலுக்கான வரி எவ்வளவு என்பது இன்னும் குறிப்பிடப்படாத நிலையில், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் 2025ல் வரி செலுத்த தொடங்குவார்கள் பணம் செலுத்தத் தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

பொதுவாக ஆடு, மாடுகள் ஏப்பம் விடும்போது அதன் வாயில் இருந்து மீத்தேன் வாயு வெளியேறுகிறது. மீத்தேன் என்பது கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இதனால் தான் மீத்தேன் வெளியேற்றத்தை குறைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதேபோல் சிறுநீரில் இருந்து நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறுகிறது. இவை இரண்டும் பூமி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான பசுமை இல்ல வாயுக்களாகும். இதனால் தான் மாடு உள்ளிட்ட பண்ணை விலங்குகளின் பர்ப்ஸ் மற்றும் சிறுநீர் கழித்தலுக்கு வரி விதிப்பதற்கான வரைவு மசோதாவை நியூசிலாந்து அரசு முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் உண்மையில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை குறைக்க உதவும் என கூறப்படுகிறது.

பிரச்சனையாக மாறுமா?

பிரச்சனையாக மாறுமா?

அதேநேரத்தில் நியூசிலாந்து இன்னொரு பிரச்சனையை சந்திக்கலாம். ஏனென்றால் நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகை என்பது வெறும் 50 லட்சம் தான். இங்கு ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகளும், 26 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) செம்மறி ஆடுகளும் உள்ளன. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் மூலம் கிடைக்கும் பொருட்களின் பொருளாதாரத்தை தான் நியூசிலாந்து சார்ந்துள்ளது. குறிப்பாக பால் பொருட்கள் ஏற்றுமதி தான் நியூசிலாந்தின் பொருளாதாரத்துக்கு முக்கியமான மூலாதாரமாக உள்ளது. இந்த சூழலில் ஆடு மாடுகளின் ஏப்பத்துக்கு வரி விதிப்பது என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது வரிக்கு பயந்து விவசாயிகள் கால்நடை வளர்ப்பை கைவிடும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அதிகமாக பாதிக்கப்படலாம் எனவும் அங்குள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

நியூசிலாந்தின் நிலை என்ன?

நியூசிலாந்தின் நிலை என்ன?

ஆனாலும் நியூசிலாந்தில் பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது. அதாவது நியூசிலாந்தின் மொத்த மீத்தேன் வாயு வெளியேற்றத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய துறையில் இருந்து வருகிறது. இதில் ஏப்பம், விலங்கின் கழிவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் ஏப்பம் காரணமாகவே 97 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் நிச்சயம் நியூசிலாந்துக்கு தேவையான ஒன்றாக உள்ளது. 2050ம் ஆண்டுக்குள் பண்ணை உயிரினங்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுவான மீத்தேன் அளவை 47 சதவீதமாக குறைப்பதாக நியூசிலாந்து கூறியுள்ளது. நாட்டில் மாடு, ஆடுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தான் இது பெரும் சவாலானது. இதனால் தான் இந்த புதிய திட்டத்தை நியூசிலாந்து கையில் எடுத்துள்ளது.

 முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

தற்போது விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவ்வாறு வசூலிக்கப்படும் வரி என்பது மீண்டும் விவசாயம், கால்நடை வளர்ப்பிற்கே பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டின் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தை நியூசிலாந்து மக்கள் வரவேற்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த புதிய வரி வசூல் முறை தொடர்பாக வரும் நாட்களில் போராட்டம் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் 2003ல் மீத்தேன் வாயு வெளியேற்றத்தை தடுக்கும் வகையில் இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+