Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரம் காலம் நல்லா சரியில்லைன்னா.. ஆண்டிஸ் மலையும்.. மொட்டைப் பாறையாகும்!

Subscribe to Oneindia Tamil

பியூனஸ் அயர்ஸ்: எப்போதும் பனி கொட்டியபடி காட்சி தந்து, ஜொலிக்கும் ஆண்டிஸ் மலைத் தொடர் இந்த முறை பெரும் சோகத்தை சந்தித்துள்ளது. கடும் வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகரித்த வெப்பம் காரணமாக மலைத் தொடரின் பல சிகரங்களில் பனி உருகி மொட்டைப் பாறையாக காட்சி தருகிறது.

தென் அமெரிக்காவின் பெருமை ஆண்டிஸ் மலைத் தொடர். உலகப் புகழ் பெற்ற இந்த மலைத் தொடர் இந்த பனிக்காலத்தில் மிகப் பெரிய சோகத்தை சந்தித்துள்ளது.

வழக்கமாக பனிக்காலத்தின்போது ஆண்டிஸ் மலைத் தொடர் பனி மூடி காட்சி தரும். பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த அளவிலான பனிப்பொழிவை சந்தித்துள்ளது ஆண்டிஸ் மலைத் தொடர்.

பனி இல்லாத சிகரங்கள்

பனி இல்லாத சிகரங்கள்

ஆண்டிஸ் மலைத் தொடரின் பல சிகரங்களில் பனி சுத்தமாக இல்லை. வறண்டு போய்க் காணப்படுகிறது. ஆண்டிஸ் மலைத் தொடரின் வரலாற்றிலேயே இப்படி இருந்ததில்லை என்று சொல்கிறார்கள். இந்த நிலைக்குக் காரணம் காலநிலை மாற்றம்தான் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. புவி வெப்ப மயமாதலின் கடும் விளைவுதான் இது. இதனால்தான் ஆண்டிஸ் மலைத் தொடர் சிகரங்கள் வறட்சியை சந்தித்துள்ளன. பனிப்பொழிவு குறைந்து போனதற்கும் இதுவே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டு காலத்தில் இல்லாத வறட்சி

கடந்த பத்து ஆண்டு காலத்தில் இல்லாத வறட்சி

ஆனால் இந்த வறட்சி இப்போது நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த பத்து வருடமாகவே ஆண்டிஸ் மலைத் தொடர் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. மழைப் பொழிவும் பெரிதாக இருப்பதில்லை. பனிப்பொழிவும் முன்பு போல அதிகமாக இருப்பதில்லை. ஈக்வடார், அர்ஜென்டினா நாடுகளுக்கு இடையே இருக்கும் பல சிகரங்கள் வறண்டு மொட்டைப் பாறையாக காட்சி தருகின்றன. பனி அதிகம் இல்லை. ஆங்காங்கே மலையில் ஒட்டிக் கிடக்கின்றன.

மக்களுக்கான குடிநீர் சப்ளையில் பாதிப்பு

மக்களுக்கான குடிநீர் சப்ளையில் பாதிப்பு

இந்த மலையை நம்பி பல ஆயிரம் மக்கள் உள்ளனர். அதாவது குடிநீருக்கும், இதர நீர் தேவைக்கும் ஆண்டிஸ் மலையைத்தான் இந்த மக்கள் நம்பியுள்ளனர். அவர்கள் அனைவருமே ஆண்டிஸுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோதனையால் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அர்ஜென்டினா நாட்டு பனி, சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக் கழகத்தின் முதன்மை ஆய்வாளர் ரிக்கார்டே வில்லப்ளா கூறுகையில், இது மிகப் பெரிய வறட்சியாகும். வரலாற்றில் இப்படி சந்தித்தது இல்லை. நீண்ட காலமாக இங்கு பனிப்பொழிவு சரியாக இல்லை. மழைப்பொழிவும் குறைந்து விட்டது.

மழையும் இல்லை பனியும் இல்லை

மழையும் இல்லை பனியும் இல்லை


கடந்த பத்து ஆண்டுகளில் இங்கு ஏற்பட்ட மழைப் பொழிவை கணக்கு பார்த்தால் அதிர்ச்சிதான மிஞ்சுகிறது . மொத்த மலைத் தொடரும் தற்போது போதிய அளவில் பனி இல்லாமல் வறண்ட கிடக்கிறது. ஆங்காங்கு பனி ஒட்டிக் கிடக்கிறது. அவ்வளவுதான். தென் முனையில் குளிர்காலம் இருக்கும்போது இங்கு பனிப்பொழிவு அதிகரிக்கும். அதுதான் இயல்பும் ஆகும். ஆனால் தற்போது நிலைமே நேர்மாறாக உள்ளது.

அர்ஜென்டினா - சிலி எல்லை நெடுகிலும்

அர்ஜென்டினா - சிலி எல்லை நெடுகிலும்

அர்ஜென்டினா - சில எல்லை நெடுகிலும் இந்த மலைத் தொடரையொட்டி பல ரிசார்ட்டுகள் உள்ளன. அவை அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்தன. தற்போதுதான் அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பனிப்பொழிவு குறைவாக இருப்பதால் பல ரிசார்ட்டுகளுக்கு சுற்றுலா பயணிகளே வராத நிலை காணப்படுகிறது. இதனால் அவர்கள் பல பகுதிகளில் செயற்கை பனிப்பொழிவை ஏற்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

செயற்கைக் கோள் படங்கள் சொல்லும் சேதி

செயற்கைக் கோள் படங்கள் சொல்லும் சேதி

ஜூலை 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களும், இப்போது எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பனிப்பொழிவு எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை அறிய முடியும். இந்த பனிப்பொழிவின் சரிவு காரணமாக பல ஆறுகளில் நீரோட்டமும் குறைந்து விட்டது. .பல இடங்களில் ஆறுகள் வற்றியும் கிடக்கின்றன.

வளரவும் இல்லை.. தளரவும் இல்லை

வளரவும் இல்லை.. தளரவும் இல்லை

ஆண்டிஸ் மலைத் தொடரின் பல சிகரங்கள் கடந்த 2000 -2010 கால கட்டத்தில் எந்த அளவிலும் மாற்றம் காணவில்லை. வளரவும் இல்லை, குறையவும் இல்லை. காரணம் புவிவெப்ப மயமாதலே. புவிவெப்பமயமாதல் விஸ்வரூபம் எடுத்தா் பூமி என்னாகும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ஆண்டிஸ் மலைத் தொடருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை நமக்கு மறைமுகமாக விளக்குகிறது என்கிறார் ரிக்கார்டோ.

மிக நீளமான மலைச் சிகரம்

மிக நீளமான மலைச் சிகரம்

ஆண்டிஸ் மலைத் தொடர் என்பது ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப் பெரிய மலைத் தொடர். பல்வேறு சிகரங்களுடன் கூடிய மிக நீண்ட மலைத் தொடர்தான் ஆண்டிஸ். உலகிலேயே ஒரே கண்டத்தில் அமைந்த மிக நீளமான மலைத் தொடர்தான் ஆண்டிஸ். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இதன் நீளம் கிட்டத்தட்ட 7000 கிலோமீட்டர் ஆகும். இதன் அகலமானது 200 முதல் 700 கிலோமீட்டராகும். இதன் சராசரி உயரம் 4000 மீட்டராகும்.

திபெத்துக்கு அடுத்து 2வது உயரமான பீடபூமி

திபெத்துக்கு அடுத்து 2வது உயரமான பீடபூமி

தென் அமெரிக்காவின் வெனிசூலா, ஈக்வடார், சிலி, பெரு, பொலிவியா, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் வழியாக இந்த மலைத் தொடர் நீண்டு கிடக்கிறது. இந்த மலைத் தொடருக்கு மத்தியில் பல முக்கிய நகரங்களும் அமைந்தஉள்ளன. பொகோடோ, மெரிடா, எல் ஆல்டோ, லா பாஸ் ஆகியவை அதில் சில. இந்த மலைத் தொடரில் அமைந்துள்ள ஆல்டிபிளானா பீடபூமியானது, திபெத் பீடபூமிக்கு அடுத்து உலகின் 2வது உயரமான பீடபூமியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+