For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்போர்ட் டிசைன் பிடிக்காததால் ஆர்கிடெக்டை போட்டுத் தள்ளிய வட கொரிய அதிபர்

By Siva
Google Oneindia Tamil News

பியோங்யாங்: வட கொரியாவில் உள்ள பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையங்களை வடிவமைத்த நிபுணரை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வட கொரியா தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் 2 புதிய முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. கண்ணாடி சுவர்கள் கொண்ட அந்த முனையங்கள் பற்றி தான் உலக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 1ம் தேதி தான் அந்த முனையங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது.

Architect of Gleaming New North Korea Airport Missing After Leader Notes ‘Defects’

இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு முனையத்தின் வடிவமைப்பு பிடிக்கவில்லையாம். வடிவமைப்பாளர் மா வன்-சுன் தனது அரசின் உத்தரவை மனதில் வைத்து செயல்படாமல் தவறு செய்துவிட்டதாக கிம் ஜோங் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மா வன்-சுன் மாயமாகியுள்ளார். அவர் ஒன்றும் மாயமாகவில்லை, கிம் ஜோங் உன் தான் அவருக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியிருப்பார் என்று கூறப்படுகிறது. கிம் ஹோங் இதுவரை 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார்.

முன்னதாக கிம் ஹோங் கலந்து கொண்ட ராணுவ கூட்டத்தில் தூங்கியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
North Korean leader Kim Jon Un has reportedly executed the architect who designed the new terminals of Pyongyang International Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X