For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியின் 7 "கஸின்ஸ்".. அதில் எத்தனையில் நாம் வாழ முடியும் தெரியுமா? சுவாரசிய தகவல்கள்

பூமியை போன்ற 7 புதிய கிரகங்களில் நாம் எத்தனை கிரகங்களில் வாழ முடியும் என்பது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசா கண்டுபிடித்துள்ள பூமியை போன்ற 7 கோள்களில் எத்தனையில் உயிர் வாழ முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 7 கோளில் 3ல் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா நேற்று அறிவித்தது. அவை பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் பூமியை போன்று பாறை, தண்ணீர், காற்று உள்ளிட்டவற்றை அந்த கோள்கள் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோள்கள் அதிக வெப்பமானதும் அல்ல, அதிக குளிரும் கொண்டது அல்ல. பாறைகள், தண்ணீர், ஏரி என பூமியை பிரதிப்பலிப்பது போன்று இந்த கோள்கள் உள்ளன. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான காலநிலை சூழல் உள்ளதா என தெரியவில்லை.

பூமியின் நெருங்கிய உறவினர்கள்

பூமியின் நெருங்கிய உறவினர்கள்

பூமியின் நெருங்கிய உறவினர்கள், பூமியின் கஸின்ஸ் என இந்த 7 புதியக் கோள்கள் அழைக்கப்படுகின்றன. அவற்றில் எத்தனையில் உயிர் வாழ சாத்தியம் உள்ளது என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 7 கோள்களில் குறைந்தது 3 இல் மனிதர்கள் வாழமுடியும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

10 வருஷம் ஆய்வு செய்யனும்

10 வருஷம் ஆய்வு செய்யனும்

மற்ற 4 கோள்கள் அதிக நீரை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவை அனைத்தும் ஒரே அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்பது குறித்து 10 ஆண்டுகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக ஒளி வீசும் கோள்கள்

அதிக ஒளி வீசும் கோள்கள்

பூமி போன்ற அதிக கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதிக ஒளி வீசும் அவற்றை இரவு நேரங்களில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என கூறியுள்ளனர்.

சுருங்கிய நட்சத்திரங்கள், நிழல் உலகங்கள்

சுருங்கிய நட்சத்திரங்கள், நிழல் உலகங்கள்

டிரப்பிஸ்ட்-1 என்ற கோள் மண்டலத்தின் முதல் கோள் வியாழன் கோளை விட 80 மடங்கு பெரியது என கூறப்படுகிறது. மேலும் பல லட்சம் கோடி வருடங்கள் பழமையான சுருங்கிய நட்சத்திரங்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதிக குளிரை கொண்ட குள்ளமான 2000 மடங்கு அதிக ஒளி வீசக் கூடிய 20 மடங்கு குள்ளமான அரிய வகை கோளாகும்.மேலும் இந்தக் கோள் 12.5 மடங்கு குண்டானதுமாகும்.

1.5 நாள் முதல் 20 நாள் வரை சுற்றுகிறது

1.5 நாள் முதல் 20 நாள் வரை சுற்றுகிறது

டிரப்பிஸ்ட் -1 பி கோள் ஒன்றரை நாளில் தனது சுற்றுப்பாதையை கடப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் டிரப்பிஸ்ட் -1எச் கோள் தனது சுற்றுப்பாதையை கடக்க 20 நாட்கள் எடுத்து கொள்கிறது. இது வெள்ளிக் கோள் சூரியானை கடக்க எடுத்துக்கொள்ளும் நாட்களை விட 5 மடங்கு குறைவாகும். இது எல்லாவற்றுக்கும் மேலாக டிரப்பிஸ்ட்-1 கோள் மிதமான வெப்பத்தை கொண்டுள்ளது.

அதிகுளிருக்கு வாய்ப்புள்ள கோள் மண்டலம்

அதிகுளிருக்கு வாய்ப்புள்ள கோள் மண்டலம்

இந்த கோள்கள் அதிக குளிர் கொண்டவையாக இருக்கும் என கருதப்படுகிறது. இவற்றை பார்க்க வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் அடுத்த ஆண்டு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த கோள் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த கோள்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ தகுதியுள்ளதா?

வாழ தகுதியுள்ளதா?

இந்த குள்ள கோள்களில் உள்ள வாயுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடத்தியான ஹைட்ரஜன் கோள்களின் மேற்பரப்பில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நீர் ஆவியாவதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் அங்கு கார்பன் டை ஆக்ஸைடு இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக்ஸிஜன் இருப்பது உறுதியானால் இது வாழ தகுதியுள்ள கோளாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் நிலையில் இதுகுறித்த பல முக்கிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Nasa found 7 planets like earth. Astronomers say at least three of the worlds may be habitable, and could be studied for signs of life within a decade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X