For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை எப்படி இருக்க வேண்டும்.. கருவிலேயே டிசைன் செய்யலாம்.. அதிரவைக்கும் டெக்னாலஜி

கருவில் இருக்கும் குழந்தையின் டிஎன்ஏ செல்களை மாற்றுவதன் மூலம் , அதன் எதிர்காலத்தையும், திறமைகளையும் மாற்ற முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: கருவில் இருக்கும் குழந்தையின் டிஎன்ஏ செல்களை மாற்றுவதன் மூலம் , அதன் எதிர்காலத்தையும், திறமைகளையும் மாற்ற முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி என்று மருத்துவர் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளார். 2 வருட தீவிர ஆராய்ச்சிக்கு பின் இப்படி கருவில் மாற்றும் தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இது என்ன மாதிரியான பயன்களை தரும், மக்கள் இதன் மூலம் எப்படி வளர்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் இதில் சில பிரச்சனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன செய்வார்கள்

என்ன செய்வார்கள்

குழந்தை கருவில் உருவான உடனே அதன் டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் அதன் குணத்தை மாற்ற முடியும் என்று இவர் கண்டுபிடித்துள்ளார். இல்லையென்றால், நமக்கு தேவையான குணத்துடன் புதிதாக கருவை உருவாக்கி, அதை வளர வைக்க முடியும் என்று கண்டுபித்துள்ளார். சோதனைக் குழாய் குழந்தையை போலவே இதை உருவாக்கி, பின் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

யார் வேண்டும்

யார் வேண்டும்

இதை வைத்து நமக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ அப்படி உருவாக்கலாம். உதாரணமாக, கோஹ்லி போல, ரஹ்மான் போல, ஒபாமா போல, ரஜினி போல குழந்தை வேண்டும் என்றால், அது போல டிஎன்ஏ வடிவமைத்து திறமையான நபர்களை உருவாக்கலாம். நாம் கருவில் செய்யும் மாற்றம் வளர வளர வெளிப்படும் என்று கூறப்படுகிறது.

எப்போது வரும்

எப்போது வரும்

இந்த தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை. இதில் இன்னும் பல சோதனைகள் நடத்த வேண்டி இருக்கிறது. குறைந்தது 5 வருடங்களாவது ஆகும். அதே போல் இதை எல்லா நாடுகளும் அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் இதற்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இதில் சில பிரச்சனை இருக்கிறது. நாம் உருவாக்கும் குழந்தை முழுக்க முழுக்க அதே குணநலனுடன் இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. அடுத்ததாக இப்படி, மாற்றுவதன் மூலம், அந்த குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனை ஏற்படலாம். உதாரணமாக சிந்திக்கும் திறனில் மாற்றம் ஏற்படலாம், என்று கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க பயன்பாட்டிற்கு வரும்போதுதான் உண்மை தெரியவரும் .

English summary
Baby designing technology may create a new world in few years. Scientist named Henry Greely, creates easy technology to design baby in the womb in America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X