மரணஓலம்.. சீனாவில் தினசரி கொரோனா பலி என்ன? பிரிட்டன் சுகாதார நிறுவனம் ஷாக் தகவல்..ரொம்பவே சோகம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு, பலி இன்னும் குறையவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதோடு, சீனா தொடர்ந்து கொரோனா சார்ந்த பாதிப்பு, பலி உள்ளிட்ட விபரங்களை மறைத்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் கொரோனா பரவல் குறித்தும் பாதிப்பு, பலி பற்றியும் பிரிட்டனை தலைமையிடாக கொண்டு செயல்படும் சுகாதார தரவு நிறுவனம் ஷாக் தகவலை வெளியிட்டுள்ளது.
2019 இறுதியில் கொரோனா வைரஸ் என்ற பெயரை நாம் அனைவரும் கேட்க தொடங்கினோம். சீனாவின் வூஹானில் உள்ள மார்க்கெட்டில் இருந்து இந்த வைரஸ் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது. சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட சுமார் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அடிக்கடி கொரோனா வைரஸ் உருமாறி தாக்க தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.

நிம்மதிக்கு பிரேக் போட்ட கொரோனா
இதனால் ஊரடங்கு அமலானது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடக்கியது. இதற்கிடையே உலக நாடுகளின் சுகாதார நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி கண்டறிந்தனர். தடுப்பூசியை மக்கள் செலுத்திய நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஒரு வருடமாக இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சற்று குறைந்து வந்தது. இதனால் மக்கள் நிம்மதியடைந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரேனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மக்களின் நிம்மதிக்கு பிரேக் போடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவும் கொரோனா
சீனாவில் தற்போது ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் அிக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் தினமும் பல ஆயிரம் இறப்பதோடு, கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 3.7 கோடி பேர் வரை கூட பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, தகனம் செய்யும் இடங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் சுகாதார நிறுவனம் ஆய்வு
இந்த கொரோனா பாதிப்பு, பலி தொடர்பான விபரங்களை சீனா வெளியிடாமல் மறைப்பதோடு, உலக சுகாதார நிறுவனத்துக்கு எந்த தகவலும் வழங்கவில்லை. இதனால் சீனாவின் நிலை குறித்து பல்வேறு உலக சுகாதார நிபுணர்கள் கண்காணித்து முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், உலக நாடுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுகாதார தரவு நிறுவனம் சீனாவின் கொரோனா பரவல் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரம் வருமாறு:

கொரோனா பலியில் ஷாக்
சீனாவில் கொரோனா தடுப்புக்கான பூஜ்ஜிய கோவிட் கொள்கை எனும் பெயரிலான கடும் கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு நாளும் சீனாவில் 9 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். டிசம்பரில் மட்டும் சீனாவில் கொரோனாவால் 1 கோடியே 86 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளது. ஜனவரியின் நடுப்பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 37 லட்சத்தை தொடலாம். ஜனவரி 23ம் தேதியின் அடிப்படையில் பார்த்தால் சீனாவில் கொரோனா மரணம் என்பது 5 லட்சத்து 84 ஆயிரமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முற்றிலும் வேறுபாடு
பிரிட்டன் சுகாதார நிறுவனத்தின் இந்த தரவு என்பது சீனா வெளியிடும் கொரோனா பாதிப்பு, பலி விபரங்களை ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபாடானது. டிசம்பர் 30ல் கொரோனாவால் ஒருவர் மட்டுமே இறந்ததாக சீனா கூறிய நிலையில் இந்த சுகாதார நிறுவனம் சார்பில் சீனாவில் தினசரி கொரோனா மரணம் என்பது 9 ஆயிரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
இதனால் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இந்தியா உள்பட பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா, மெராக்கோ, மலேசியா உள்பட பல நாடுகளிலும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, கட்டாய தனிமையில் அமலுக்கு வர உள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications