சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிச்சுவான்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

China earthquake, Death toll rises to at least 100

இந்த இடிபாடுகளில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least 100 people have been killed and 1000 injured in an earthquake that hit area of Sichuan province in China.
Please Wait while comments are loading...