For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனக் குடிகாரரைத் துப்பாக்கிச் சூட்டிலிருந்து காப்பாற்றிய செல்போன்!

Google Oneindia Tamil News

சின்சூ: சீனாவில் குடிகாரர் ஒருவரின் உயிரை அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் காப்பாற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சின்சூ நகரை சேர்ந்தவர் ஹன்பெங். குடிகாரரான இவர் பாருக்கு சென்று மது குடித்துக் கொண்டிருந்த ஒருவருடன் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார்.

அதில் ஒரு குண்டு அவரது இதய பகுதியில் பாய்ந்தது. ஆனால் நல்ல வேளையாக அவர் சாகவில்லை. லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் அவரை காப்பாற்றியது.

அதாவது அந்த நபர் சுட்ட துப்பாக்கி குண்டு நெஞ்சை துளைக்காமல் செல்போனை தாக்கியது. அதனால் உயிர் தப்பிய அவர் தனது செல்போனுக்கு நன்றி தெரிவித்தார்.

English summary
China man was saved by his cell phone. He is a drunken man, and fight with someone in bar. That man shot him and he is saved by his cell phone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X