For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை இணைக்க 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை... சீனா ஆய்வு!!

By Mathi
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்காவை இணைக்க 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க சீனா ஆய்வு செய்து வருகிறது.

சீனா மணிக்கு 410 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக புல்லட் ரயில்களை இயக்கி வருகின்றன. அண்மையில் மணிக்கு 510 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயில் சேவைக்கான வெள்ளோட்டமும் விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து மணிக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயிலை இயக்குவதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை இணைக்க 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கவும் சீனா ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் இருந்து செர்பியா வழியாக இந்த பாதை அமைக்கப்படுமாம். அதன் பின்னர் பேரிங் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் 220 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டு ரஷியா மற்றும் அலாஸ்கா, கனடாவை எட்டி அமெரிக்காவுக்குள் நுழையுமாம் இந்த ரயில் பாதை.

இந்த ரயில் பாதை திட்டம் குறித்து ஏற்கெனவே ரஷ்யாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பாதையில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்கினால் அதிகபட்சம் 2 நாட்களில் அமெரிக்காவை சென்றடைந்துவிட முடியும் என்று கணக்கிட்டுள்ளனர்.

English summary
China plans to build an ambitious 13,000 km rail line to operate bullet trains to America through Russia passing through a tunnel underneath the Pacific Ocean to reach the continental US via Alaska and Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X