எலி போல அடைத்து வைக்கப்படும் மக்கள்.. சோறு கேட்டால் அடி - மக்களை வதைக்கும் சீனாவின் கொடூர முகம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு தன் நாட்டு மக்களை எலிப்பொறி போன்ற சிறிய சிறிய தனிமைப்படுத்துதல் அடைப்பதும், உணவு கேட்டவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனவைரஸ் அந்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவியது நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அது அந்நாட்டு ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
தொடர்ந்து அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் பலத்த பொருளாதார இழப்பையும் உலக நாடுகள் சந்தித்தன.

கொரோனா வைரஸ்
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கோரத் தாண்டவத்திற்கு பிறகும் விடை கொடுக்காத கொரோனா ஓமிக்ரான் என உருமாற்றம் அடைந்த திரிபாக மாறி மீண்டும் பரவி வருகிறது. சீனாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த அளவிலேயே பதிவாகும் வரும் நிலையில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ளவர்களுக்கு பெரும்பான்மையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில் சீனாவில் பரவிய கட்டுப்படுத்தும் வகையில் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட நாட்டு மக்களை மிகச்சிறிய தனிமைப்படுத்துதல் அறைகளில் கட்டாயமாக அடைக்கப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த அளவிலிருந்து பதிவாகி வரும் நிலையில் சிலருக்கு மைக்ரான் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சீனாவில் அன்யாங் நகரத்தில் வசிக்கும் மக்களில் இரண்டு பேருக்கு பாதிப்பு சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 லட்சம் மக்கள் வரை வசிக்கும் அன்யாங் நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது. இதையடுத்து ஜியான் நகரில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அறைகளில் அடைத்து கொடூரம்
அந்த குவாரண்டைன் முகாம்களில் மக்கள் இரண்டு வாரங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது எடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குவாரண்டைன் முகாம்கள் மிகச் சிறிய பெட்டி போல அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத வகையில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு வாங்க வெளியே வந்த நபரை முன் களப்பணியாளர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவுக்கு கண்டனம்
மேலும் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோரை தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ள ஒரே அடைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி. இதனால் உலக அளவில் சீனாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பீஜிங்கில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் தொடர் பரவலைத் தடுக்க கடுமையான தடுப்பு விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதற்காக மக்களை வாட்டி வதைக்க வேண்டும் எனவும் கேள்வி எழுந்துள்ளது. தனது நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு கூறினாலும், தற்போது வெளிவந்துள்ள வீடியோ சீனாவின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications