For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அழகுப் புயலோடு' மோடியைச் சந்திக்கிறார் சீன அதிபர்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சீன அதிபர் ஜின் பிங் உடன் அவரது மனைவி அழகுப்புயல் பெங் லியுயானும் வர இருக்கிறார்.

வரும் வாரம் இந்தியாவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் சீன அதிபர் ஜின் பிங். அகமதாபாத்தில் மோடி அவர்களை நேரில் வரவேற்க உள்ளார். அன்று மோடியின் பிறந்தநாள் என்பது மற்றுமொரு சிறப்பு.

இந்நிலையில், சீன அதிபருடன் அவரது மனைவியும் வருகை தர உள்ளார். சீன அதிபர் அரசியலில் பிரபலமாவதற்கு முன்னரே பிரபலமாக வளைய வந்தவர் அவரது மனைவி பெங் லியுயான்.

வரலாறு காணாத பாதுகாப்பு...

வரலாறு காணாத பாதுகாப்பு...

இவர்களுக்காக ஆமதாபாத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேசிய அளவில், சர்வதேச அளவில் அமையும் என்று பெருமிதத்துடன் சொல்கிறார் குஜராத் போலீஸ் டி.ஜி.பி. பி.சி. தாக்குர்.

அறிமுகம்...

அறிமுகம்...

1980களில் சீன அரசின் டெலிவிஷனில் சீனப்புத்தாண்டிற்காக பாடல் பாடி பிரபலம் ஆனார் பெங். அதனைத் தொடர்ந்து தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.

சிறப்பு நிகழ்ச்சி...

சிறப்பு நிகழ்ச்சி...

சீனா-வியட்னாம் போரின்போது, போர் முனையில் ராணுவ வீரர்களை ஊக்குவிப்பதற்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்தி தனது தேசப்பற்றை நிரூபித்தவர் பெங்.

போர்ப்ஸ் பட்டியல்...

போர்ப்ஸ் பட்டியல்...

பிரபல அமெரிக்க பத்திரிகை ‘போர்ப்ஸ்', இந்த ஆண்டு உலகின் அதிக சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் பெங் 57-வது இடத்தில் உள்ளார்.

உடைகள் ஆராய்ச்சி...

உடைகள் ஆராய்ச்சி...

‘பெங் கட்டமைக்கப்பட்ட உடை அழகில் ஆர்வம் கொண்டிருக்கிறார். நவீன சீன ‘குய்பாவ்' உடைகள், சிறியதும் கச்சிதமானதுமான மாண்டரின் காலர்களைக் கொண்ட உடைகளை, பூ வேலைப்பாடுகளை கொண்ட உடைகளை விரும்பி அணிகிறார்' என்று இவர் அணியும் உடைகளை ஆராய்கிறது, ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' ஏடு.

அறுசுவை விருந்து...

அறுசுவை விருந்து...

இந்தியப் பயணத்தின் போது, ஆமதாபாத்தில் தேசப்பிதா காந்தியோடு ஒட்டி உறவாடிய சபர்மதி ஆசிரமத்துக்கு, ஜின்பிங்- பெங் தம்பதியரை பிரதமர் மோடி அழைத்துச்செல்கிறார். அதனைத் தொடர்ந்து சபர்மதி ஆற்றங்கரையில் அறுசுவை விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
It will be a birthday to remember for Narendra Modi, by hosting dinner for Chinese President Xi Jinping as the Prime Minister of India on the Sabarmati riverfront.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X