தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 இந்தியர்கள் கப்பல் நைஜீரியாவில் சிறைபிடிப்பு- மீட்க கோரிக்கை!
அபுஜா: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 பேருடன் நைஜீரியா கடற்படையால் கச்சா எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 16 இந்தியர்களை பாதுகாப்ப மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நார்வே நாட்டை சேர்ந்த தனியார் கப்பல் MV HEROIC IDUN. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்தியர்கள், 8 ஈழத் தமிழர்கள் என மொத்தம் 26 பேர் பணியாளர்களாக பணிபுரிந்தனர்.

இக்கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக நைஜீரியா நாட்டுக்கு சென்றது. நைஜீரியாவை இக்கப்பல் சென்றடைந்த நிலையில் கடற்கொள்ளையர்கள், இந்தியர்களின் கப்பலை சுற்றி வளைக்க பின் தொடர்ந்தனர். இதனால் உயிர் தப்பிக்க கினியா நாட்டின் தீவு பகுதிக்குள் அக்கப்பல் நுழைந்தது. இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
தங்களது நாட்டில் அத்துமீறி கப்பல் நுழைந்ததால் 2.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது கினியா. இத்தொகையை கினியாவுக்கு நார்வே கப்பல் செலுத்திவிட்ட நிலையில் நைஜீரியாவிடம் அக்கப்பல் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்தியர்கள் தற்போது நைஜீரிய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

நைஜீரியாவோ, கச்சா எண்ணெய் திருட்டில் நார்வே கப்பல் ஈடுபட்டது; ஆகையால் அந்த கப்பல் தொடர்பாக விசாரணைகள் நடத்தி வருகிறோம் என்றது. இது தொடர்பக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நைஜீரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 16 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே நைஜீரியா கடற்படையிடம் சிக்கி உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நைஜீரியா கடற்படையிடம் பிரிஸ்பன் - தூத்துக்குடி, ராஜன் தீபன்பாபு- சென்னை, சுகுமார்-ராமாபுரம் ஆகியோர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் பேச வேண்டும்; நைஜீரியாவில் தத்தளித்து வரும் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications