For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தை திருமணங்களை தடுத்த சமையல் எண்ணெய்.. சூப்பர் முயற்சி!

Google Oneindia Tamil News

டாக்கா: குழந்தை திருமணங்களை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வு முயற்சிகளை உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் கையாண்டு வருகின்றன. வங்கதேசத்தின் கிராமப்புறங்களில் சமையல் எண்ணெய்யை வைத்து குழந்தை திருமணங்கள் நடப்பதை வெகுவாக குறைத்துள்ளார்கள். இது தொடர்பாக அமெரிக்கர்கள் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிக அளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவது ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் தான். பருவவயது அடைந்த உடனேயே அதாவது 14வயது தாண்டிவிட்டலே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.

கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு

இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்திலும் கிட்டதட்ட இதே போன்ற நிலை தான் இருக்கிறது. உலகிலேயே அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறும் இரண்டாவது நாடாக வங்கதேசம் திகழந்தது.

சமையல எண்ணெய்

சமையல எண்ணெய்

குறிப்பாக வங்கதேசத்தின் கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதை தடுக்க என்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. அது எப்படி கைகொடுத்து என்பது பற்றி அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் மற்றும் டியூக் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட சர்வதேச குழு ஆய்வு நடத்தி பார்த்து.

என்ன ஆய்வு

என்ன ஆய்வு

அதாவது 18 வயதுக்குள்ள உள்ள சிறுமிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் திருமணத்தை தள்ளிப்போட்டால் இலவசமாக சமையல் எண்ணெயை வழங்குவது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இதன்படி 'குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சமிக்ஞை: வங்கதேசத்தில் இருந்து கோட்பாடு மற்றும் பரிசோதனை சான்றுகள்' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

குறைந்தது திருமணங்கள்

குறைந்தது திருமணங்கள்

இந்த ஆய்வின் படி இலவமாக வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் காரணமாக 18 வயதிற்குட்பட்ட குழந்தைத் திருமணத்தை 17 சதவீதமாகவும், 16 வயதுக்குக் குறைவானவர்கள் திருமணத்தை 18 சதவீதமாகவும் குறைந்துள்ளது இலவச சமையல் எண்ணெய் மானியத்தால் 15-17 வயதுடைய சிறுமிகளின் குடும்பங்களில் குழந்தை திருமணம் பெரிய அளவில் குறைந்தது.

நல்ல பலன்

நல்ல பலன்

இந்த ஆய்வுக்கு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் நினா புச்மேன் தலைமையில் நடந்தது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பான 'குழந்தைகளை காப்பாற்றுங்கள்' உடன் இணைந்து நடத்தப்பட்டது, தென் மத்திய வங்கதேசத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள 460 கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான சிறுமிகளிடம் இலவச சமையல் எண்ணெய் முயற்சி செய்யப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக குந்தை திருமணங்கள் பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது.

English summary
a multi-year study conducted in Bangladesh, which has the second-highest prevalence of child marriage after Niger (Africa), the researchers concluded that offering cooking oil as an incentive to girls and their families can convince them to postpone marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X